Virat Kholi With Rohit Sharma (Photo Credit: Twitter)

ஜூன் 30, பார்படோஸ் (Sports News): ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) இறுதிப்போட்டி, நேற்று இரவு 8 மணி மணியளவில் கரீபியன் தீவுகளில் உள்ள பார்படோஸ் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. ரோகித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணியும், எய்டன் மார்க்கம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் (India Vs South Africa IND Vs SA) 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இறுதிக்கட்டத்தை எட்டி இருந்தது.

அடித்து நொறுக்கிய இந்தியா:

நேற்று இரவு எட்டு மணியளவில் தொடங்கிய ஆட்டம், பல கோடிக்கணக்கான இந்திய மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி, உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தைப் பெற்ற ஆட்டமாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய ரோகித் சர்மா களமிறங்கிய வேகத்தில் 5 பந்துகளில் ஒன்பது ரன்கள் அடித்த அவுட் ஆகி வெளியேறினாலும், அதுவரை குறைந்த ரன்களில் பல போட்டிகளில் வெளியேறி இருந்த விராட் கோலி நின்று அடித்து அதிரடியாக செயல்பட்டார். அவர் 59 பந்துகளில் 76 ரன்கள் சேகரிக்க, அக்சர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் அடித்திருந்தார். IND Vs SA Final: டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு.! 

மிகப்பெரிய வெற்றி:

சிவம் டியூப் 16 பந்துகளில் 27 ரன்கள் அடிக்க, இந்திய அணி சிறிய போராட்டத்திற்கு பின் 176 ரன்கள் சேர்ந்தது. தென்னாபிரிக்க அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் கேசவ் மற்றும் ஆண்ரிச் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தனர். அதனைத்தொடர்ந்து, 177 ரன்கள் எடுத்தால் ஐசிசி ஆடவர் டி20 போட்டிக்கான உலகக்கோப்பை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றும் என்று கணவுடன் களமிறங்கிய அந்த அணியின் வீரர்கள், நின்று அடித்து ஆடினாலும் 20 ஓவர்களில் தங்களது இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவினர்.

தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி:

தென்னாபிரிக்க அணியின் சார்பில் விளையாடியவர்களில் குயிண்டன் 31 பந்துகளில் 39 ரன்னும், திரிஸ்தான் 21 பந்துகளில் 31 ரன்னும், ஹென்றிச் 27 பந்துகளில் 52 ரன்னும், டேவிட் மில்லர் 17 பந்துகளில் 21 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்திருந்த தென்னாபிரிக்க அணி, 169 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இதனால் தனது மிகப்பெரிய கனவு தகர்ந்த சோகத்தில் அந்த அணி தோல்வியை அடைந்து நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் ரன்னராக தனது பங்கை வெளிப்படுத்தியது.

ஓய்வை அறிவித்த நட்சத்திரங்கள்:

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பின் டி20 கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ள கொண்டாட்டமானது, அமெரிக்காவில் இந்திய வீரர்களால் வெகு விமர்சையாக முன்னெடுக்கப்பட்டது. மேலும், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மைதானத்தில் இந்திய தேசிய கொடியை நாட்டினார். அதனைத்தொடர்ந்து, அவர் டி20 தொடர போட்டிகளில் இருந்து ஓய்வை பெறுவதாகவும் அறிவித்திருக்கிறார். அவரின் ஓய்வு வெற்றியுடன் நிறைவுபெற்றதால், ரசிகர்கள் ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். போட்டி முடிந்ததும் விராட் கோலி டி20 தொடரில் இருந்து தன்னை விடுவித்து அறிவித்துக்கொண்ட நிலையில், தற்போது ரோகித் சர்மாவும் டி20 லிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

அண்ணன்-தம்பிகளாக: