India's T20 World Cup Squad: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்க்கான இந்திய அணி.. நடராஜன் இருந்திருக்க வேண்டும்.. சுப்பிரமணியம் பத்ரிநாத்தின் விமர்சனம்..!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்க்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மே 02, சென்னை (Sports News): டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (ICC Men's T20 World Cup 2024) வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான விளம்பர தூதராக பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படுபவர். இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி: இந்நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்க்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ரிசர்வ்ஸ் பிளேயர் ஆக ஷுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதே நேரம் தமிழக வீரர்கள் நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Flying Taxi In India: 2026க்குள் பயன்பாட்டிற்கு வருகிறது பறக்கும் டாக்சி.. அதும் நம்ப சென்னையில..!
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பில்லை: இந்நிலையில் தம்முடைய காலத்திலிருந்தே தென் மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்புகளும் ஆதரவும் வழங்கப்படுவதில்லை என்று முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் (Subramaniam Badrinath) விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, “2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இருந்திருக்க வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் ஏன் 2 மடங்கு சிறப்பாக விளையாட வேண்டியுள்ளது? தனிபட்ட முறையில் நானும் இந்த சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளேன். இது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தேர்வுக் குழுவில் இருந்தும் இது பற்றி யாரும் கேள்வி எழுப்புவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.