Rohit Sharma and Abhishek Nayar’s Chat Video: கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளருடன் உரையாடிய ரோஹித் சர்மா; வீடியோ வைரல்..!
களத்தில் எதிர் அணியின் பயிற்சியாளருடன் ரோஹித் சர்மா உரையாடிய வீடியோ பதிவிடப்பட்டு பின் நீக்கப்பட்ட நிலையில், அந்த விடியோவை வைத்து ரசிகர்கள் புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கின்றனர்.
மே 11, மும்பை (Cricket News): ஐபிஎல் 2024 (IPL 2024) சீசனில், மொத்தம் உள்ள 74 ஆட்டங்களில் தற்போது வரை 59 ஆட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் ஐபிஎல் தொடரில், வெற்றி யாருக்கு கிடைக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. இன்றைய புள்ளிப்பட்டியல் பதிவுகளின்படி, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை அணிகள் முதல் நான்கு இடத்தில் இருக்கின்றன. ஐபிஎல் போட்டி விதிமுறைகளின்படி, முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் தகுதிச்சுற்று, இறுதிசுற்றுக்கு தேர்வு செய்யப்படும். இதனால் எதிர்வரும் எஞ்சிய போட்டிகளில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கும் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் வெற்றியை பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சென்னை அணி நான்காவது இடத்தில் இருக்கிறது எனினும், எஞ்சிய இரண்டு போட்டியிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரோஹித் (Rohit Sharma) சர்மாவின் நிலை என்ன? மும்பை அணியை பொறுத்தமட்டில், தான் எதிர்கொண்ட 12 போட்டிகளில் 4 ல் மட்டுமே வெற்றிபெற்று ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணியை கடந்த ஆண்டு வரை வழிநடத்தி வந்த ரோஹித் சர்மா, இந்த ஆண்டு கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியவிடம் வழங்கி இருந்தார். அவரின் செயல்பாடுகளும் ஒருசில போட்டிகளில் நன்றாக அமைந்தாலும், பலவற்றில் கேள்விக்குறியை உண்டாக்கி இருந்தது. மைதானத்தில் அவர் வருந்திய சில விடியோவும் வெளியாகியது. Dhoni Fan in Ground: தோனியின் கால்களில் விழுந்த ரசிகர்; சென்னை Vs குஜராத் அணிக்கு இடையேயான போட்டியில் ரசிகரின் செயல்.!
ரோஹித் - அபிஷேக் வீடியோ வைரல்: இந்நிலையில், ரோஹித் சர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் சார்பில் விளையாடலாம் என்றும், இல்லையேல் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வுபெறலாம் என்றும் பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடடையே அதிர்ச்சியை தந்துள்ளது. இந்நிலையில், ரோஹித் சர்மா மற்றும் கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளர் (Abhishek Nayar, KKR Coach) அபிஷேக் நாயர் ஆகியோர் உரையாடிக்கொள்ளும் வீடியோ ஒன்றை கொல்கத்தா அணி வெளியிட்டு, பின் அதனை நீக்கி இருந்தது. இந்த விடியோவை பதிவிறக்கம் செய்துகொண்ட கிரிக்கெட் ரசிகர்கள், தங்களின் ஊகப்படி பல்வேறு தகவலை பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர். இந்த விசயத்திற்கு ரோஹித் சர்மா மௌனம் கலைத்தால் மட்டுமே அதற்கான முற்றுப்புள்ளி வைக்கப்படும். இருவரும் பேசிக்கொள்ளும்போது, "ஒவ்வொரு சிந்தனையும் மாற்றம் அடைகிறது. இது இன்று வரை எனது வீடு, கோவில். நான் இதனை கட்டமைத்து இருக்கிறேன்" என பேசிகொண்டுள்ளனர்.