மே 11, அகமதாபாத் (Cricket News): ஐபிஎல் 2024 (IPL 2024) சீசனில் நேற்று குஜராத் - சென்னை (GT Vs CSK) அணிகளுக்கு இடையேயான 59வது ஆட்டம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்கள் அடித்திருந்தார். ஹில் 55 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். நேற்று குஜராத் அணியின் சிறப்பான ஆட்டம் அணியின் ரன்களை பன்மடங்கு உயர்த்தியது. Bus Fallen Into River: தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்த பேருந்து; 7 பேர் பரிதாப பலி..! 

போராடி தோற்ற சென்னை அணி: அதனைத்தொடர்ந்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினார். பின் களமிறங்கிய மிட்சல் 34 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார். மெயின் அலி 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். தோனி 11 பந்துகளில் 26 ரன்னும், சிவம் டியூப் 13 பந்துகளில் 21 ரன்னும் எடுத்திருந்தனர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழந்த சென்னை அணி, தனது இலக்கை எட்ட முடியாமல் 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அமோக வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக 55 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த குஜராத் அணியை சேர்ந்த கில் சிறந்த ஆட்டக்காரராகவும் தேர்வு செய்யப்பட்டார். Rural Agriculture Training: கிராமப்புற வேளாண்மை பயிற்சி.. கலக்கி வரும் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள்..!

தோனியின் காலில் விழுந்த ரசிகர்: குஜராத் அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் மோகித் சர்மா மூன்று விக்கெட்டுகளையும், ரஷித் கான் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றிய இருந்தனர். இந்த ஆட்டத்தின் போது தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், திடீரென மைதானத்திற்குள் நுழைந்து தோனி பேட்டிங் செய்ய வரும் போது அவரது காலில் விழுந்தார். தோனி அவரை எழுப்பி அங்கிருந்து அனுப்பி வைத்து, அதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய புறப்பட்டார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.