IND vs BAN, 2nd Test: சச்சினைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக சாதனை படைத்த விராட் "கிங்க்" கோலி.. 27000 ரன்களை கடந்து சாதனை.!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெறும் 594 இன்னிங்ஸ்களிலேயே 27,000 ரன்கள் அடித்த விராட், சச்சினின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
செப்டம்பர் 30, கான்பூர் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா - வங்கதேச (IND Vs BAN 2nd Test) அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூரில் (Kanpur) உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2வது மற்றும் 3வது நாள் ஆட்டங்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. IPL Retention 2024: ஐபிஎல் மெகா ஏலம்: தக்க வைப்பதற்கான விதிகளை வெளியிட்டது பிசிசிஐ.. தோனிக்கு மீண்டும் வாய்ப்பு?.. விபரம் உள்ளே.!
இந்தியா தரப்பில் அதிரடியாக விளையாடிய ரோகித் 23, ஜெய்ஸ்வால் 72,கில் 39 மற்றும் விராட் கோலி 47 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். இந்த ஆட்டத்தில் விராட் கோலி (Virat Kohli) அடித்த ரன்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்களை அடித்ததே உலக சாதனையாக இருந்தது.
தற்போது வெறும் 594 இன்னிங்ஸ்களிலேயே 27,000 ரன்கள் அடித்த விராட், சச்சினின் (Sachin Tendulkar) சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். மேலும் ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 27,000 ரன்களை கடந்த 4-வது வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கரா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் உள்ளனர்.