செப்டம்பர் 29, புதுடெல்லி (New Delhi): இந்திய அளவில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறும் ஐபிஎல் ஆட்டங்களை, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ (BCCI) தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. ஐபிஎல் ஆட்டங்களுக்கு என பல்வேறு விதிமுறைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்திற்கு முன்பு, வீரர்களை ஏலம் எடுப்பது தொடர்பான நிகழ்வுகள், பிரம்மாண்டமாக நடைபெறும். அந்தவகையில், 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் (IPL 2025) தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏலம் தொடர்பான விஷயமும் அடுத்தபடியாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிசிசிஐ ஏலம் தொடர்பான விசயத்திற்கு புதிய நிபந்தனைகளை அறிவித்து இருக்கிறது.
வீரர்களை தக்க வைக்க கட்டுப்பாடு:
அதன்படி, ஐபிஎல் 2025 மெகா (IPL Audition 2025) ஏலத்திற்கு முன்பு, அணியின் உரிமையாளர்கள் ஆறு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். ஒரு அணி அதிகபட்சமாக 5 வீரர்களை தக்கவைக்கலாம். இவர்களில் ஆறாவது வீரர் ஆட்டம் இழக்காத நபராகவும் இருக்க வேண்டும். நான்கு கேப்ட் அல்லதுஇரண்டு அன்கேப் வீரர்களை தக்கவைக்கலாம். எந்த வீரரையும் தக்க வைக்காத அணி, போட்டிக்கான உரிமை அட்டையை (ஆர்டிஎம்) பயன்படுத்தலாம். இந்த பயன்பாடு 2018 க்கு பின் தற்போது மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. IND Vs BAN T20I: வங்கதேசத்திற்கு எதிரான 3 டி20 போட்டிகள்; இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது பிசிசிஐ.. விபரம் உள்ளே.!
கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் உயர வாய்ப்பு:
ஏலத்துக்கான நிதி ரூ.120 கோடி அளவில் உயர்த்தப்பட்டுள்ளது என்பதால், மெகா ஏலத்திற்கு முன் 6 வீரர்களையும் தக்க வைக்கும் அணியின் உரிமையாளர் ரூ.79 கோடியை செலுத்த நேரிடும். முதல் தேர்வு தக்கவைப்பு தொகையாக ரூ.18 கோடி அறிவிக்கப்படும். கடந்த 2022ல் அதிகபட்ச தக்கவைப்பு தொகையாக ரூ.16 கோடி, இரண்டாவதாக ரூ.14 கோடி, மூன்றாவதாக ரூ.11 கோடி என்ற அளவில் இருந்தது. நான்காவது, ஐந்தாவது விருப்ப தக்கவைப்பு நபர்களின் தொகையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. விளையாடாத வீரருக்கு ரூ.4 கோடி ஊதியம் என்பது கிடைக்கும்.
தோனிக்கு மீண்டும் வாய்ப்பு?:
4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் அணிக்கு, 2 ஆர்.டி.எம் கார்டுகள் இருக்கும். எந்த வீரரையும் தக்க வைக்காத அணிக்கு 6 ஆர்.டி.எம் கார்டு வரை இருக்கும். 2025 ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலத்துக்கு முன்னதாகவே எம்.எஸ் தோனியின் (MS Dhoni) மீது பலரின் கண்கள் திரும்பியுள்ள நிலையில், அவர் புதிய விதிகளால் தக்க வைக்கப்பட்டு அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வீரர்களும் மெகா ஏலத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அவர் மெகா ஏலத்தில் தன்னை பதிவு செய்யவில்லை என்றால், எதிர்வரும் அடுத்த ஆண்டில் அவர் பதிவு செய்ய தகுதி இல்லதாவரக அறிவிக்கப்படுவார்.