IND Vs NZ 1st Test: 36 ஆண்டுகள் கழிந்து இந்திய மண்ணில் சாதனை படைத்த நியூசிலாந்து; இந்தியா போராடி தோல்வி.!

இந்திய அணி முதல் போட்டியில் தவறிவிட்டதை இரண்டாவது போட்டியில் எட்டிப்பிடித்தாலும், நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் அதனை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

Team India | IND Vs NZ Test (Photo Credit: @BCCI X)

அக்டோபர் 20, பெங்களூரு (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து (Team New Zealand) கிரிக்கெட் அணி, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து முதல் டெஸ்ட் போட்டியை (IND Vs NZ First Test) எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 31.2 ஓவரில் பத்தி விக்கெட்டையும் இழந்து 46 ரன்கள் எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து, மறுமலையில் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அதிரடியாக ஆடி ரன்களை குவித்ததையடுத்து, அந்த அணி 91.3 ஓவர் வரை தாக்குப்பிடித்து, 10 விக்கெட்டையும் இழந்து 402 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது இன்னிங்கிஸ்:

பின் இந்திய கிரிக்கெட் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், முதல் இன்னிங்சில் விட்டதை இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி எட்டிப் பிடித்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய சர்ப்ராஸ் கான் 195 பந்துகளின் 150 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார், ரிஷப் பண்ட் 105 பந்துகளில் 99 ரன்னும் அதிகபட்சமாக நடித்திருந்தனர். கோலி 70 ரன்கள் கடந்தும், ரோகித் சர்மா 63 பந்துகளின் 52 ரன்களை கடந்தும் இருந்தனர். இதனால் 99.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த இந்திய கிரிக்கெட் அணி, 402 ரன்கள் எடுத்திருந்தது. IND Vs NZ 1st Test: முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு 107 ரன்கள் தேவை.. இந்தியா நாளை பந்துவீச்சில் அசத்துமா..? 

எளிய வெற்றியில் நியூசிலாந்து, போராடி தோற்ற இந்தியா:

இதனையடுத்து, மொத்தமாக 107 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி அடைந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில், சச்சின் ரவிந்திரா மற்றும் வில் யங் ஆகிய ஜோடி களத்தில் நின்று ஆடி அணிக்கு ரன்களை குவித்து வெற்றியை தனதாக்கியது. சுமார் 27.4 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழந்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 110 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது.

IND Vs NZ Test 2024 | Team India (Photo Credit: @BCCI X)

36 ஆண்டுகளுக்கு பின் சரித்திரம் கண்ட நியூசிலாந்து:

இந்த வெற்றியின் வாயிலாக கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு பின்பு நியூசிலாந்து அணி பெங்களூர் மண்ணில் டெஸ்ட் தொடரில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. கடந்த 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற வெற்றிக்கு பின் நியூசிலாந்து அணி பெங்களூரில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் கோட்டையாக இருந்து வந்த பெங்களூர் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், நியூஸிலாந்தின் அதிரடி செயல்பாடுகள் அதன் வெற்றிக்கு வழிவகை செய்துள்ளது.

அடுத்த ஆட்டம்:

அக்.24ம் தேதி அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. பின் மூன்றாவது மட்டும் இறுதி ஆட்டம் நவ. 1 முதல் தொடங்கி நடைபெறுகிறது.  முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வியை அடைந்ததால்,  அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கும், இரண்டில் ஒன்றில் வெற்றிபெறவேண்டிய கட்டாயம் நியூசிலாந்து அணிக்கும் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஆட்டங்களுக்காக வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

பும்ராவால் மட்டுமே முடிக்கும் திறன்கொண்ட பந்துவீச்சு: