அக்டோபர் 19, பெங்களூரு (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி (IND Vs NZ 1st Test, Day 4) பெங்களுருவில் (Bengaluru) நேற்று முன்தினம் (அக்டோபர் 16) தொடங்கியது. கனமழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தது. அடுத்து, நியூசிலாந்து அணி 402 ரன்கள் அடித்தது. IND Vs NZ 1st Test: ரச்சின் ரவீந்திரா சதத்தால் நியூசிலாந்து 402 ரன்கள் குவிப்பு.. இந்தியா நிதான ஆட்டம்..!
இந்நிலையில், இன்று நான்காவது நாள் தொடக்கத்தில் சர்பராஸ் கான் - ரிஷப் பண்ட் இணை 211 பந்துகளில் 177 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி வலுவான ஸ்கோரை உயர்த்தும் என்ற எதிர்பார்த்த வேளையில், சர்பராஸ் கான் (Sarfaraz Khan) 150 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து, ரிஷப் பண்ட் (Rishabh Pant) 1 ரன்னில் சதத்தை நழுவ விட்டார். இதன்பின்னர் வந்த கேஎல் ராகுல், ஜடேஜா, அஸ்வின் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற இந்தியா 99.3 ஓவர்களில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணி தரப்பில், மேட் ஹென்றி, ஓரூக் தலா 3 விக்கெட்களையும், அஜாஸ் படேல் 2, சவுதி, பிலிப்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து, நியூசிலாந்து அணி வெற்றி பெற 107 ரன்கள் தேவைப்படுகிறது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு 0.4 பந்துகள் வீசிய நிலையில் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தினால், 4-வது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. நாளை கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 107 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், இந்தியா அபாரமாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தும் முனைப்பில் செயல்படும்.
அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட்:
IND vs NZ 1st Test match day 4
- Rishabh Pant Dominance #INDvsNZ
— The Hindustan Army (@Hindustani57041) October 19, 2024