Rishabh Pant's X Hacked? இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா? பரிசு அறிவிப்பால் நெட்டிசன்கள் சந்தேகம்.!
நீரஜ் சோப்ரா வெற்றி அடைந்தால், தனது ட்விட் தகவலை அதிகம் பகிரும் நபருக்கு ரூ.1 இலட்சம் பரிசு தரப்படும், 10 பேருக்கு விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கிரிக்கெட் வீரர் கூறியுள்ளது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 07, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், 2024 ஒலிம்பிக் (Paris Olympics 2024) போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா தற்போது வரை 3 வெண்கல பதக்கங்களை வென்று இருக்கிறது. நீரஜ் சோப்ரா நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து அடுத்த தகுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். அதேபோல, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இதனால் அடுத்தடுத்து இந்தியாவுக்கு பதக்கங்கள் ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.
3 வெண்கலத்தை மட்டும் தனதாக்கிய இந்தியா:
ஆகஸ்ட் 08ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் நீரஜ் சோப்ரா தங்கத்தை எட்டிப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, மல்யுத்தத்திலும் வினேஷ் தங்கத்தை எட்டுவார் என நம்பப்படுகிறது. தற்போது வரை பாரிஸ் ஒலிம்பிக்சில் இந்தியா 3 வெண்கல பதக்கத்தை தவிர வேறு ஏதும் அடையாத நிலையில், அதற்கான முயற்சிகளை வீரர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் இடுகை ஒன்றை இட்டுள்ளார். Vinesh Phogat: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த வினேஷ் போகத்; ராகுல் காந்தி பாராட்டு..! விபரம் உள்ளே.!
ரிஷப் பண்ட் எக்ஸ் கணக்கில் பரிசு தருவதாக அறிவிப்பு:
அந்த பதிவில், "ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால், எனது ட்விட்டை அதிகம் விரும்பி கருத்து தெரிவிப்போருக்கு ரூ.100089 தருகிறேன். கவனத்தை பெற முயற்சி செய்யும் முதல் 10 நபர்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும். எனது சகோதரருக்காக இந்தியா மற்றும் உலகத்தின் ஆதரவைபெறுவோம். நான் ஒப்புக்கொள்கிறேன். முடிவை பொருட்படுத்தாது, விளையாட்டு வீரர்களை ஆதரிப்பது முக்கியமானது. அவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பை நாம் பாராட்ட வேண்டும், கொண்டாட வேண்டும். இந்திய விளையாட்டுகளின் அசாத்திய திறமையை உலகுக்கு நாம் வெளிகாட்டுவோம்" என கூறியுள்ளார்.
நெட்டிசன்கள் கேள்வி:
இந்த பதிவுகளில் ரிஷப் முதலில் தெரிவித்துள்ள பரிசு அறிவிப்பு சர்ச்சையை உண்டாகியுள்ள நிலையில், அவரின் எக்ஸ் பக்கத்தை யாரேனும் ஹேக் செய்து இவ்வாறான தகவலை பதிவிட்டுள்ளனரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து தற்போது வரை ரிஷப் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.
ரிஷப் பண்டின் எக்ஸ் பதிவுகள்: