ஆகஸ்ட் 07, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (Paris Olympcis 2024) போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்தியா 32 பிரிவுகளில் உள்ள விளையாட்டுகளில் பங்கெடுத்து தனது சிறப்பான செயலை வெளிப்படுத்தி வந்தது. மொத்தமாக 117 இந்திய வீரர்-வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்து இருக்கின்றனர். நாடுகளின் பட்டியலை பொறுத்தமட்டில் அமெரிக்கா 24 தங்கம், 31 வெள்ளி, 31 வெண்கலம் என 86 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. சீனா 22 தங்கம், 21 வெள்ளி, 16 வெண்கலம் என 59 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 14 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என 35 பதக்கதுடன் மூன்றாவது இடத்திலும், பிரான்ஸ் 13 தங்கம், 16 வெள்ளி, 19 வெண்கலம் என 48 பதக்கத்துடன் நான்காவது இடத்திலும் பட்டியலில் இருக்கிறது. 3 வெண்கல பதக்கத்துடன் இந்தியா 63வது இடத்தில் இருக்கிறது.
மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியா:
நேற்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில், பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இந்தியாவின் வினேஷ் போகத் (Indian wrestler Vinesh Phogat), ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார். இதில் வினேஷ் போகத் 3-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு வினேஷ் முன்னேறினார். யு சுசாகி 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில் வினேஷ் போகட் உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். பின் ய்யேசுநெல்லிஸ் குஸ்ட்மேனை (Yusneylys Guzmán) 5-0 செட் கணக்கில் தோல்வியடைய செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். நேற்று ஒரேநாளில் அவர் அடுத்தடுத்து 3 போட்டிகளை எதிர்கொண்டுள்ளார். இவற்றில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை சென்றுள்ள முதல் பெண்ணாகவும் அறியப்படுகிறார். இதன் வாயிலாக இந்தியா மிகப்பெரிய வெற்றியை பெண்கள் மல்யுத்த பிரிவில் எதிர்கொண்டுள்ளது.
ராகுல் காந்தி பாராட்டு:
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று ஒரே நாளில் உலகளவில் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீரர்களை வீழ்த்தி சாதனை படைத்த வினேஷுடன் இணைந்து ஒட்டுமொத்த இந்தியாவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறது. வினேஷ் மற்றும் அவரின் போராட்டத்தை மறுத்தவர்கள், அவர்களின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பிய அனைவருக்கும் இதன் வாயிலாக பதில் கிடைத்துள்ளது. இந்தியாவை ரத்தக்கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்புக்கும் இன்று வீர மகளின் தீரம் பதிலாக கிடைத்துள்ளது. இதுதான் வெற்றியாளர்களின் அடையாளம். அவர்கள் களத்தில் இருந்து பதில்களை வழங்குகிறார்கள். வாழ்த்துக்கள் வினேஷ். உங்களின் பாரிஸ் வெற்றி டெல்லி வரை தெளிவாக கேட்கிறது" என கூறியுள்ளார்.
ராகுல் காந்தி பாராட்டு:
एक ही दिन में दुनिया की तीन धुरंधर पहलवानों को हराने के बाद आज विनेश के साथ-साथ पूरा देश भावुक है।
जिन्होंने भी विनेश और उसके साथियों के संघर्ष को झुठलाया, उनकी नीयत और काबिलियत तक पर प्रश्नचिन्ह खड़े किए, उन सभी को जवाब मिल चुका है।
आज भारत की बहादुर बेटी के सामने सत्ता का… pic.twitter.com/MzfIrYfRog
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2024
அம்மாவுடன் மகிழ்ச்சியாக உரையாற்றிய வினேஷ்:
It takes a village - Vinesh PHOGAT 🇮🇳 talking to her mother after becoming the first Indian to reach Olympic final in women’s wrestling#uww #wrestling #wrestleparis #olympics #paris2024 pic.twitter.com/Kh5SDCVR3T
— United World Wrestling (@wrestling) August 6, 2024