SRH Vs RR Highlights: போராடி தோற்ற ராஜஸ்தான் அணி; பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் பஞ்சரான சம்பவம்.!
தொடக்கத்திலேயே ரன்களை உயர்த்தி ராஜஸ்தான் அணிக்கு மலைப்பை உண்டாக்கிய ஹைதராபாத், பந்துவீச்சில் திறம்பட செயல்பட்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.
மே 25, சென்னை (Chennai): ஐபிஎல் 2024 (IPL 2024) கிரிக்கெட் தொடரில், மே 24ம் தேதியான நேற்று இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் (SRH Vs RR) ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய டார்விஸ் ஹெட் 28 பந்துகளில் 34 ரன்கள், அபிஷேக் ஷர்மா ஐந்து பந்துகளில் 12 ரன்கள், ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்கள், கெயின்ரிச் 34 பந்துகளில் 50 ரன்கள், ஷாநபாஸ் அகமத் 18 பந்துகளில் 18 ரன்கள் அடித்து அசத்தியிருந்தனர். Malaysia Masters 2024: மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டி.. அரை இறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து..!
ஹைதராபாத் அணி வெற்றி: இதனையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கிய நிலையில், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் அணியினர் திணறிப்போயினர். தொடக்க ஆட்டக்காரர்கள் நின்று ஆடினாலும், அடுத்தடுத்து விக்கெட் இழந்து அணி தனது இலக்கை எட்ட முடியாமல் போனது. ராஜஸ்தான் அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 42 ரன்னும், துருவ் 35 பந்துகளில் 56 ரன்னும் அடித்திருந்தனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறிவிட, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்திருந்த ராஜஸ்தான் அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
இறுதிப்போட்டி விபரம்: நாளை (மே 26) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (SRH Vs KKR) அணியும் மோதிக்கொள்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவை எதிர்நோக்கி கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பலரும் நேரில் சென்று பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதால், நாளை சென்னை சேப்பாக்கம் மைதானம் விழாக்கோலம் பூண்டு இருக்கும். இந்த போட்டியை வீட்டில் இருந்தவாறு ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் இலவசமாக நேரலையில் கண்டு களிக்கலாம்.
வெற்றியும் - தோல்வியும்:
அசத்திய நாகராஜன்:
வெற்றிகொண்டாட்டத்தில் ஹைதராபாத்: