MS Dhoni: அடுத்தாண்டு சி.எஸ்.கே.,வில் தோனி விளையாடுவாரா? சிஇஓ விஸ்வநாதன் கூறியது என்ன?!
வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
அக்டோபர் 21, சென்னை (Sports News): அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த ஏலம் நடத்தப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தக்க வைக்கப்படும் வீரர்களின் விவரங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக எம்எஸ் தோனி (MS Dhoni) விளையாடி வருகிறார். இதுவரை அவரது தலைமையில் 5 முறை அணி கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தனது கேப்டன்சியை ருதுராஜ்க்கு கொடுத்தார். வருகின்ற 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் (IPL Mega Auction 2025) நடைபெற உள்ள நிலையில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு ஐபிஎல்-லில் மட்டுமே விளையாடி வருகிறார். Sanju Samson: கனவை மனதுக்குள் விதையாக வைத்து துளிர்க்கவிட்ட சஞ்சு; அவரே தெரிவித்த நெகிழ்ச்சி தகவல்.!
அன் கேப்டு வீரர்: தற்போது, வீரர்களை தக்கவைக்கும் விதிமுறைகள் குறித்து பிசிசிஐ விவாதித்து வருகின்றது. குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றிருந்தால், அன் கேப்டு வீரராக (Uncapped Player) பயன்படுத்தலாம். கடைசியாக 2021-ஆம் ஆண்டு இந்த விதிமுறை இருந்தது. தற்போது, பிசிசிஐ இந்த விதியை மீண்டும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இது தோனி போன்ற வீரர்களுக்கு ஆதரவாக இருக்கும். இருப்பினும், ஓய்வு பெறுவாரா என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.
இதற்கிடையே சிஎஸ்கே அணிக்காக எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறோம் என்று அணி உரிமையாளரின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், இறுதி முடிவு எம்எஸ் தோனியிடமே உள்ளது. இதைப் பற்றி எம்எஸ் தோனி இந்த மாதம் விவாதிப்பார் என்றும்
மெகா ஏலத்திற்கு முன்னதாக, வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை சமர்பிப்பதற்கான காலக்கெடுவான அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தனது முடிவை அறிவிப்பதாக தோனி உறுதியளித்ததாகவும் விஸ்வநாதன் தெரிவித்தார்.