அக்டோபர் 21, புனே (Cricket News): இந்திய பிரீமியர் லீக் போட்டியின் நட்சத்திர ஆட்டக்காரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துணை கேப்டனுமான சஞ்சு சாம்சன் (Sanju Samson), தனது 50வது சர்வதேச போட்டியில் விளையாட ஒரேயொரு போட்டி மட்டும் இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டெஸ்ட், டி20 என பல ஆட்டங்களில் விளையாடியுள்ள சஞ்சு, திருவனந்தபுரத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் ஆவார். சமீபத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணிக்காக சதம் அடித்து விளாசி இருந்தார். இவரிடம் தனியார் செய்தி நிறுவனம் சார்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
கண்களின் மாறிய நிறம்:
அதற்கு பதிலளித்த சஞ்சு, "பயிற்சியாளருக்கும் - வீரருக்கமான உறவு முக்கியம். அதனை நான் கட்டாயம் ஒப்புக்கொள்வேன். பயிற்சியாளர்கள் உங்களின் திறமை மீது நம்பிக்கை கொண்டுள்ளார். நீங்கள் உங்களின் அணிக்காக சிறப்பாக செய்லடுவதால் நம்பிக்கையை செலுத்துகிறீர்கள். வங்கதேசத்திற்கு எதிரான டி20 ஆட்டத்தில், முதலில் இரண்டு ஆட்டத்தில் பெரிய அளவு ரன்களை நான் எடுக்கவில்லை. இதனால் பயிற்சியாளர்களின் (கெளதம்) கண்கள் மாறியதை நான் அறிந்து கொஞ்சம் பயந்தேன். பின் சதம் அடித்தபோது அவர் மகிழ்ச்சியாக இருந்தார். Archery World Cup: வில்வித்தை போட்டியில் அப்பறம்; இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளி வென்று அசத்தல்.!
வாய்ப்புக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்:
கிரிக்கெட் போட்டியில் நான் நுழைந்து 10 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு பயணமும் எனக்கு வித்தியாசமானது. ஜிம்பாவேயில் நான் அறிமுகமாகி, இன்று இந்திய அணியில் தொடர்ந்து நிலைத்து நிற்கிறேன். இந்தியாவுக்காக, இந்திய அணிக்காக விளையாட பலரும் கனவுகளுடன் காத்திருகிறார்கள். அவர்கள் அனைவரும் மிகக்கடினமான உழைத்து ரன்களை குவிக்கிறார்கள். எனக்கு கிடைக்கும் வாய்ப்புக்கு எப்போதும் நான் நன்றி உள்ளவராக இருக்கிறேன். முடிவு எப்படி இருந்தாலும் அதனை நான் பொருட்படுத்துவது இல்லை. அனுபவத்தை கற்றுக்கொள்வேன். எனது கவனம் இலக்கை நெருங்குவது மட்டுமே.
ஆசை, கனவு நனவாகியது:
நானும், சூரியாவும் பல ஜூனியர் கிரிக்கெட்களை ஒன்றாக விளையாடி இருக்கிறோம். பல நேரங்களில் ஒன்றாக கிரிக்கெட் குறித்து விவாதித்து இருக்கிறோம். எங்களுக்குள் இருக்கும் நட்பு அப்படிப்பட்டது. எனக்கு அவரின் விளையாட்டு தெரியும், அவருக்கு எனது விளையாட்டு தெரியும். சுருவின் போராட்டம், கடின உழைப்பே அவரை தனித்துவமான வீரராக மாற்றி இருக்கிறது. அவரின் சாதனைகள் என்னை வியக்கவைக்கும், மரியாதையை கூடுதலாக்கும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைக்கும். சிறுவயதில் இருந்து இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது ஆசை, கனவு. ஆனால், இதுகுறித்து அதிகம் பேசியது இல்லை, எனக்குள் வைத்தேன். இன்று என்னால் ஆன முயற்சியை தருகிறேன்" என கூறினார்.