Ravichandran Ashwin: ஐசிசி டெஸ்ட் பவுலர்ஸ் தரவரிசை... மீண்டும் முதலிடம் பிடித்த அஸ்வின்..!

ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

Ravichandran Ashwin (Photo Credit: @ians_india X)

மார்ச் 13, புதுடெல்லி (New Delhi): இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி (IND Vs ENG Test Series) தரம்சாலாவில் (Dharamsala) நடைபெற்றது. இந்தப் போட்டியின் மூலமாக தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ( ICC Men’s Test Bowling Rankings) மீண்டும் முதலிடத்தை பிடித்தார். இவர் 2015 டிசம்பரில் முதன்முதலாக நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தார். Vendhaya Kali: வெயில் காலத்தில் உடல் சூடு தணிய வெந்தயக்களி.. சுவையாக செய்வது எப்படி?.!

இதற்கிடையில், தர்மசாலா டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் 15 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 16-வது இடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தையும், சுப்மன் கில் 11 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now