மார்ச் 13, சென்னை (Kitchen Tips): வெந்தய களி என்பது தமிழகத்தின் உணவு வகைகளில் பிரபலமான ஒன்று ஆகும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுவதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம் - 1/4 கப்
உளுந்தம்பருப்பு - 1/2 கப்
பச்சரிசி - 1/2 கப்
நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
வெல்லப்பாகு- 1/2 கப்
செய்முறை: முதலில் பச்சரிசி,வெந்தயம், உளுந்தம் பருப்பு, சுத்தம் பண்ணி 1 மணி நேரம் தண்ணீர்விட்டு ஊறவிடவும். பின் தண்ணீரை வடிகட்டி விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். மறுபக்கம் வெல்லத்தை காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். Earthquake: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியடைந்த மக்கள்..!
அரைத்த மாவை தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் கனத்த பாத்திரத்தில் மாவை விட்டு நன்கு காய்ச்சவும். அதனுடன் வெல்லப்பாகு மற்றும் நல்லெண்ணெய் சேர்க்கவும். நல்லெண்ணெய் விட்டதும் இறக்கிவிடவும். வேண்டுமெனில் சாப்பிடும் போதும்நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம். அவ்வளவு தான் வெந்தயக்களி ரெடி!