WPL 2024 Final: "கப் தானடா வேணும்.. இந்தாங்கடா.." முதன் முறையாக இறுதிப்போட்டியில் வென்ற ஆர்சிபி..!
மகளிர் ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி கோப்பை வென்று அசத்தி உள்ளது.
மார்ச் 18, டெல்லி (Cricket News): மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 2ஆவது சீசன் கடந்த மாதம் பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என்று மொத்தமாக 5 அணிகள் இடம் பெற்று விளையாடின. இதில் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 113 ரன்களுக்குள் சுருண்டது. இலக்கை துரத்திய பெங்களூரு அணி கடைசி ஓவரில் இலக்கை துரத்தி வெற்றியை சுவைத்தது. Car Tractor Accident: கார் - டிராக்டர் மோதி பயங்கர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி.! திருமண வீட்டாருக்கு நேர்ந்த சோகம்.!
இதன் மூலம் முதல் முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் ஒரு சீசன்களில் கூட ஆர்சிபி டிராபியை கைப்பற்றாத நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனிலேயே ஆர்சிபி மகளிர் அணியானது டிராபியை கைப்பற்றி புதிய அத்தியாயம் படைத்துள்ளது.