Suryakumar Yadav Wins ICC Award: ஐசிசி விருதுகள் 2023... சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற சூர்யகுமார்..!
ஐசிசியின் 2023ம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார்.
ஜனவரி 24, புதுடெல்லி (New Delhi): ஐசிசி தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருது அளிக்கப்பட்டு வருகிறது. அதன் படி 2023 ஆம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்க்கான விருதை சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) வென்றார். இதன் மூலம் 2 முறை (2022, 2023) இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். Murder of Trichy Rowdy: பிரபல ரவுடி தலை வெட்டி படுகொலை.. திருச்சியில் பரபரப்பு!!
2023ம் ஆண்டில், சூர்யகுமார் யாதவ் 17 இன்னிங்ஸ்களில் 48.86 சராசரி மற்றும் 155.95 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 733 ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் சூர்யகுமார் கேப்டன் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டார்.