Murder of Trichy Rowdy: பிரபல ரவுடி தலை வெட்டி படுகொலை.. திருச்சியில் பரபரப்பு!!

திருச்சியில் பிரபல ரவுடி கெளரிசங்கர் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Murder of Trichy Rowdy: பிரபல ரவுடி தலை வெட்டி படுகொலை.. திருச்சியில் பரபரப்பு!!
Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 24, திருச்சி (Trichy): தமிழகத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நரியன் தெருவில் வசித்து வருபவர் கெளரிசங்கர் (வயது 32). இவர் அந்த பகுதியில் மிகப்பெரிய ரவுடியாக இருந்தவர். இவர் மக்களை அச்சுறுத்தி காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வந்தார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காக சிறைத்தண்டனை பெற்ற இவர் சில காலம் முன்பு ஜாமீனில் வெளியில் வந்தார்.

இவர் மண்ணச்சநல்லூரில் தேங்காய் நார் பிரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இந்த தொழிற்சாலையிலிருந்து கயிறு தயாரித்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நேற்று இரவுஇவர் பணிகளை முடித்துவிட்டு, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தார். பிறகு எல்லாரும் அவரவர் வீட்டுக்குச் செல்ல, கௌரிசங்கர் மட்டும் அங்குள்ள கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். Half of Earth Will Vanish: 2050 ஆம் ஆண்டுக்குள் பூமியில் பாதி காணாமல் போய்விடும்.. எச்சரிக்கை விடுத்த காலநிலை நிபுணர்..!

இந்நிலையில் அதிகாலை சுமார் 2.30 மணிக்கு மர்ம நபர்கள் தூக்கத்தில் இருந்த கெளரிசங்கரை சராமாரியாக அரிவாளால் தலை, கழுத்து, உடலில் வெட்டிக் கொலை செய்தனர். கொலை செய்து விட்டு, கையுடன் மாலையை அவரது உடலுக்கு அணிவித்துவிட்டு சென்றுள்ளனர். அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள், கெளரிசங்கர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இச்சம்பவம் திருச்சி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இக்கொலையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jan 24, 2024 06:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).