Team India T20i: பெண்கள் டி20 Vs ஆண்கள் டி20 .. 80+ ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி.. முழு விபரம் உள்ளே.!
ஒரே நாளில் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி 80 க்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது.
அக்டோபர் 10, துபாய் (Cricket News): அமீரகத்தில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை (Women's T20 World Cup 2024) போட்டியில், அக்டோபர் ஒன்பதாம் தேதியான நேற்று இந்தியா மற்றும் இலங்கை (IND Vs SL) பெண்கள் கிரிக்கெட் அணி மோதிக்கொண்டன. போட்டியின் தொடக்கத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் (INDW Vs SLW) சார்பில் விளையாடிய வீரர்கள், அதிரடியாக களம்கண்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 172 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய சைபில் வர்மா 40 பந்துகளில் 43 ரன்னும், மந்தனா 38 பந்துகளில் 50 ரன்னும், ஹர்மன் பிரீத் கவுர் 27 பந்துகளில் 52 ரன்னும் அதிகபட்சமாக அடித்தனர்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அபார வெற்றி:
இதனையடுத்து, மறுமுனையில் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கிய நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் இலங்கை அணியினர் திணறி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தோல்வியை தழுவினர். அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் காவேஷா 22 பந்துகளில் 21 ரன்னும், அனுஷ்கா 22 பந்துகளில் 20 ரன்னும், அம காஞ்சனா 22 பந்துகளில் 19 ரன்னும் மட்டுமே அதிகபட்சமாக எடுத்திருந்தனர். பிற அனைவரும் சொற்பரன்களில் வெளியேறிய நிலையில், 19.5 ஓவரில் பத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி 90 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடியவர்களில் அருந்ததி ரெட்டி, ஆஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டையும், ரேணுகா சிங் இரண்டு விக்கெட் கைப்பற்றிய அசத்தியிருந்தனர். இந்த வெற்றி மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. Donnybrook Match On WWE Raw: கம்பினை வைத்து சுழட்டி அடிக்கும் டோனிபுரூக் போட்டி.. வீர தழும்புகளுடன் வெற்றி பெற்ற ஷீமஸ்..!
இமாலய இலக்கை குவித்த இந்திய அணி (IND Vs BAN T20I):
அதேபோல், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 ஆட்டங்களில் மோதிக்கொண்டது. அக்டோபர் ஒன்பதாம் தேதியான நேற்று இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சார்பில் விளையாடியவர்களில், நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்துகளில் 74 ரன்னும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்னும், ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 32 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டை இந்திய அணி இழந்தாலும், 221 ரன்களை குவித்து இருந்தது.
இந்திய அணி அசத்தல் வெற்றி:
இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் வீரர்கள், நின்று நிதானமாக ஆடினாலும், இந்திய அணியின் பந்துவீச்சு அவர்களால் ரன்களை குவிக்க இயலாமல் திணற வைத்தது. மேலும், இலக்கை எட்டிப் பிடிக்க முடியவில்லை. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் முகமதுல்லா 39 பந்துகளில் 49 ரன்கள் அதிகபட்சமாக அடித்திருந்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் 20 ரன்கள் கூட கடக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி தனது இலக்கை எட்டிப் பிடிக்க கூட இயலாமல் 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அடுத்தடுத்து சாதனை:
நேற்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் அணி ஆட்டத்தில், இரண்டு அணிகளும் சுமார் 80+ ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்துள்ளது கவனிக்கப்படுகிறது. மேலும், ஆண்கள் கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகளில் 2 ல் வெற்றி அடைந்து கோப்பையை தனதாக்கியது. எஞ்சிய ஒரு போட்டி வரும் அக்.12 அன்று ஹைதராபாத்தில் உள்ள மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. அதேபோல, பெண்கள் கிரிக்கெட் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்திற்குள் முன்னேறி இருக்கிறது. இதனால் செமி பைனலுக்கு செல்லும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இருவேறு ஆட்டங்களில் பெண்கள் கிரிக்கெட் அணி ராதா யாதவ் & ஆண்கள் கிரிக்கெட் அணி ஹர்திக் பாண்டியா கேட்ச் பிடித்த காட்சிகள்: