KS Bharat Dedicated Century to Lord Ram: சதத்தை பகவான் ஸ்ரீ ராமருக்கு அர்ப்பணித்த கிரிக்கெட் வீரர்; மைதானத்தில் நெகிழ்ச்சி செயல்.!
விளையாட்டு மைதானத்தில் சதம் அடித்த வீரர், ராமர் வில் எய்வது போல தனது செயல்பாடுகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தார்.
ஜனவரி 21, அகமதாபாத் (Ahmedabad): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா ஏ அணிக்கும் - இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் (India A Vs England Lions) இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன், ரஜத் படிதார், பிரதோஷ் பால், சர்ஃபராஸ் கான், ஸ்ரீகர் பாரத், துருவ் ஜூரல், மானவ் சுதர், துஷார் தேஷ்பாண்டே, நவ்தீப் சைனி, ஆகாஷ் தீப், புல்கித் நரங், வித்வத் கவேரப்பா ஆகியோர் விளையாடுகின்றனர்.
இங்கிலாந்து அணியின் சார்பில் கீட்டன் ஜென்னிங்ஸ், அலெக்ஸ் லீஸ், ஜோஷ் போஹானன்(சி), டான் மௌஸ்லி, ஆலிவர் பிரைஸ், கேசி ஆல்ட்ரிட்ஜ், டாம் லாவ்ஸ், ஜேம்ஸ் ரெவ்(வ), பிரைடன் கார்ஸ், ஜேம்ஸ் கோல்ஸ், ஜாக் கார்சன், மேத்யூ ஃபிஷர், கால்ம் பார்கின்சன், மேத்யூ பாட்ஸ், ஆலி ராபின்சன் ஆகியோர் விளையாடுகின்றனர். Ram Mandir Inauguration: ராமர் கோவில் திறப்புவிழா கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாட்டில் தடை? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்.!
இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், ஆட்டத்தின்போது கே.எஸ் பரத் 100 ரன்களை கடந்து இருந்தார். அப்போது, தனது சத்தினை ஸ்ரீ ராமருக்கு அர்பணிக்கும்பொருட்டு, வில் அம்பு எய்வது போல செய்கை காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் விசாகப்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)