Central Minister Nirmala Sitaraman | TN Govt Logo (Photo Credit: Wikipedia)

ஜனவரி 21, புதுடெல்லி (NEW DELHI): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் (Ram Mandir), நாளை ஸ்ரீ ராமர் கோவில் கும்பாவிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக அம்மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் அயோத்தி சென்றுவரும் வகையில் விமானம், இரயில் போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. நாளைய தினம் இந்தியா முழுவதும் உள்ள பிற ராமர் மற்றும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தடை தகவலும், அரசின் விளக்கமும்: இந்நிலையில், தமிழ்நாடு அரசு தொலைக்காட்சியில் ராமர் கோவில் கும்பாவிஷேக பணிகளை நேரலை ஒளிபரப்பு செய்யவும், கோவில்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள சிறப்பு பூஜைக்கும் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இதுதொடர்பான விவாதங்கள் முன்வரவே, தமிழ்நாடு அரசு பூஜைகளுக்கு அரசு சார்பில் ஏதும் தடை விதிக்கவில்லை என்று தெரிவித்தது. மேலும், சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு கருதி நேரடி ஒளிபரப்புக்கு மட்டும் தடை விதித்துள்ளதாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் கண்டனம்: இந்த விசயத்திற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில், "நாளை அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ஸ்ரீ ராமருக்கு என 200-க்கும் அதிகமான கோவில்கள் இருக்கின்றன. இந்து அறநிலையத்துறை அமைப்பால் நிர்வகிக்கப்படும் கோவிலில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை, பஜனை, அன்னதானம் என எந்நிகழ்ச்சிகளும் நடைபெறக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. Anandaraj Family: தமிழ் திரையுலகின் வில்லன் அடையாளம் இன்று நகைச்சுவை நட்சத்திரம்: ஆனந்தராஜின் குடும்பத்துடன் கிளிக்ஸ் இதோ.!

திமுகவின் இந்து விரோத முயற்சி: தனியார் கோவில்களில் ராமர் கும்பாவிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரும் விழா அமைப்பினரை மிரட்டுகிறார்கள். இதுபோன்ற இந்து விரோத, வெறுக்கத்தக்க செயல்களினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு உணவளித்தல், இனிப்புகள் வழங்குதல் போன்ற கொண்டாட்டங்களுக்கு மக்கள் அச்சுறுத்தலை சந்திக்கிறார்கள். பிரதமர் மோடியின் செயல்பாடுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்வதை தடுக்க மின்சார துண்டிப்பு முயற்சியும் நடக்கலாம் என தெரியவருகிறது. இது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவின் இந்து விரோத முயற்சி ஆகும்.

நேரலை விஷயத்தினை நியாயப்படுத்த தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வம் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கூறுகிறது. அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனை இப்போது ஏற்படுமா?.. பிரதமரின் செயல்களுக்காகவும், தமிழ்நாட்டில் ராமரை கொண்டாடவும் மக்கள் தாமாக முன்வந்துள்ளதால் திமுக அதிர்ச்சியில் இவ்வாறான செயலை செய்கிறது" என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் எக்ஸ் (ட்விட்டர்) பதிவு: