David Miller Retires From T20Is? "எதிரணியை தனது அசத்தல் பீல்டிங்கிலும், பினிசிங்கிலும் திணறடித்த கில்லர் மில்லர்க்கு எண்டு கார்டா.." இன்னும் இருக்குடா..!
டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தென் ஆப்பிரிக்கா அணி தோற்று சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.
ஜூலை 02, தென் ஆப்பிரிக்கா (Sports News): ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) இறுதிப்போட்டியில், எய்டன் மார்க்கம் தலைமையிலான தென்னாபிரிக்க அணியை தோல்வியுறச்செய்துள்ள ரோகித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி, 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி டி20 உலகக்கோப்பையை (India Vs South Africa IND Vs SA) கைப்பற்றி அசத்தி இருக்கிறது. அந்த போட்டியில் 176 ரன்கள் இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா அணி, விக்கெட்கள் விழுந்தாலும் கிளாசன் அதிரடியால், கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது. ஆனால் தொடர்ந்து விக்கெட் விழ ஆரம்பித்தது. அந்த அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டேவிட் மில்லர் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று எல்லை கோட்டில் சூர்யகுமார் யாதவ் கேட்ச்சில் அவுட் ஆனால். தொடர்ந்து 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. World UFO Day 2024: "வானம் மனித விமானங்களுக்கு மட்டும் சொந்தமில்லை.. வானில் பறக்கும் மர்மங்கள்.." உலக யுஎஃப்ஒ தினம்..!
ஓய்வை அறிவித்தாரா டேவிட் மில்லர்?: இந்நிலையில் டேவிட் மில்லர் (David Miller) தான் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக செய்திகள் உறுதியற்றதாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை. 466 டி20 போட்டிகளில், மில்லர் 35.27 சராசரியிலும், 138.21 ஸ்ட்ரைக் ரேட்டிலும் நான்கு சதங்கள் மற்றும் 45 அரைசதங்களுடன் 10,019 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 120* ஆகும். இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பொருத்தவரை, டேவிட் மில்லர் ஒரு சதம் மற்றும் 12 அரைசதங்களுடன் 36.68 சராசரி மற்றும் 138 ஸ்டிரைக் ரேட்டுடன் 2,714 ரன்கள் எடுத்துள்ளார்.