World UFO Day (Photo Credit: Pixabay)

ஜூலை 02, புதுடெல்லி (New Delhi): சர்வதேச யுஎஃப்ஒ தினம் (World UFO Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 2001 இல் யுஎஃப்ஒ ஆராய்ச்சியாளர் ஹக்தன் அக்டோகனால் (UFO hunter Haktan Akdogan) அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் மக்கள் பொதுவாக தொலைநோக்கியைக் கொண்டு வானில் ஏதும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தெரிகிறதா என்று தேடி விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. Bharat E Mart: அஞ்சல் துறையின் பாரத் இ மார்ட்.. நாடு முழுவதும் இனி வணிகம் செய்யலாம்..!

யுஎஃப்ஒ: வானத்தில் பறவை, பட்டம், விமானம், ராக்கெட் பறப்பதை பார்த்துள்ளோம். அதுபோக அவ்வப்போது விண்கற்கள், எரிகற்கள் எல்லாம் பறப்பதை பார்த்திருக்கிறோம். இப்படி நாம் இன்னதென்று அடையாளம் காண முடியாமல் விடும் பொருட்களைத் தான் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (Unidentified Flying Object) என்று குறிப்பிடுகின்றனர். அதை சுருக்கமாக யுஎஃப்ஓ (UFO) என்பர். பெரும்பாலும் வேற்று கிரகங்களில் இருந்து வந்த பறக்கும் தட்டுகளைக் குறிக்கவே இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். நாம் வேற்று கிரகங்களுக்கு பறந்து செல்ல ராக்கெட்களை பயன்படுத்துவது போன்று, வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் வேறு கிரகங்களுக்கு பறக்க, இந்த பறக்கும் தட்டுகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.