IND Vs ENG 2nd ODI: இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

டி20 போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்த இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் வெற்றி அடைந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை (Cricket News Tamil) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து பெறவும்.

Shubman Gill & Axar Patel | ENG Vs IND ODI Series 2025 (Photo Credit: @BCCI X)

பிப்ரவரி 07, கட்டக் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய தேசிய கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 (IND Vs ENG T20i Series 2025) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (India Vs England ODI Series 2025) தொடரிலும் விளையாடுகிறது. இந்த போட்டிகளில் டி20 நிறைவுபெற்ற நிலையில் இந்தியா 4 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து அணி ஒரேயொரு டி20 போட்டியை மட்டுமே வென்றது. அதனைத்தொடர்ந்து, ஒருநாள் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. IND Vs ENG 1st ODI: டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு.. இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்..!

டி20ல் இந்தியா வெற்றி, ஓடிஐ-யில் முதல் வெற்றி:

கடந்த பிப்ரவரி 06, 2025 முதல் போட்டி (IND Vs ENG 1st ODI 2025) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. அப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவரில், 10 விக்கெட்டையும் இழந்து 248 ரன்கள் எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 251 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. Ravindra Jadeja: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை; ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்து அசத்தல்..! 

இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டாவது ஒருநாள் ஆட்டம்:

50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டம் (India Vs England 2nd ODI 2025) போட்டி, ஒடிஷா மாநிலத்தில் உள்ள கட்டக், பார்பாடி (Barabati Stadium Cuttack) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டம் 09 பிப்ரவரி 2025 அன்று, மதியம் 01:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. அன்றைய பகல் நேர வெப்பநிலை 31 டிகிரி செல்சியசும், இரவு நேர வெப்பநிலை 15 டிகிரி செல்சியசும் இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 3 கிமீ என்ற நிலையில் இருக்கும். வறண்ட வானிலையே நிலவும். இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar) ஓடிடியிலும் நேரலையிலும் பார்க்கலாம்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now