பிப்ரவரி 06, நாக்பூர் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி (IND Vs ENG) இன்று (பிப்ரவரி 06) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் (VCA) மைதானத்தில் நடைபெறுகிறது. IND Vs ENG 1st ODI: இந்தியா - இங்கிலாந்து முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. நேரலையை பார்ப்பது எப்படி? தொடங்கும் நேரம் என்ன?

இங்கிலாந்து பேட்டிங் தேர்வு:

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில், ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகின்றனர். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு, முகமது சமி ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். முக்கியமாக விராட் கோலி முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்கவில்லை. மேலும், இங்கிலாந்து அணி வலுவான அணியாக திகழ்கிறது.