IPL Auction 2025 Live

Kabaddi player Snehal Shinde: தந்தையின் கனவை நனவாக்கி, தங்கப்பதக்கதுடன் நாடு திரும்பிய மகள்: ஆனந்தக்கண்ணீரில் தந்தை.!

இந்த வெற்றி இன்று வரை சிறப்பிக்கப்படுகிறது.

Father Daughter Feeling Extreme Happy (Photo Credit: @ANI Twitter)

அக்டோபர் 12, மும்பை (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில், 19வது ஆசிய நாடுகள் (Asian Games 2023) விளையாட்டு போட்டித்தொடர் நடைபெற்றது. 39 பிரிவுகளில் நடந்த போட்டியில் 28 பிரிவுகளில் இந்தியா கலந்துகொண்டது. இறுதியில் இந்திய வீரர்கள் 107 பதக்கங்களை கைப்பற்றினர். 27 பதக்கங்கள் தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

107 பதக்கங்களில் 28 தங்கப்பதக்கம், 38 வெள்ளிப்பதக்கம், 41 வெண்கலப்பதக்கம் அடங்கும். இந்திய பெண்கள் கபாடி அணி, இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொண்டு அபார வெற்றி அடைந்தது. கடுமையான தொடர் போராட்டம், பார்வையாளர்களுக்கு தொற்றிக்கொண்ட பரபரப்புகளுக்கு மத்தியில் இந்தியா வெற்றி அடைந்தது.

இதனால் இந்திய அணியின் சார்பில் விளையாடிய ஒவ்வொரு கபடி (Indian Women Kabaddi Players) வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் (Gold Medal) பரிசாக வழங்கப்பட்டது. 26 - 25 புள்ளிகள் வீதம் இந்தியா மிகக்கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தனது தங்கப்பதக்கத்தை உறுதி செய்தது. Cobra Spotted Auto Rickshaw: ஆட்டோவில் ஏறி அதகளம் செய்த நல்ல பாம்பு: பார்ப்போரை படமெடுத்து மிரட்டிய பகீர் சம்பவம்.! 

இந்திய அணியின் சார்பில் அக்ஷிமா, ஜோதி, பூஜா, பூஜா, பிரியங்கா, புஷ்பா, சாக்ஷி குமாரி, ரிது நேகி, நிதி ஷர்மா, சுஷ்மா சர்மா, சினேகல் பிரதீப் ஷிண்டே (Snehal Pradeep Shinde), சோனாலி விஷ்ணு ஷிங்கட் ஆகிய வீராங்கனைகள் விளையாடி இருந்தனர்.

கடந்த முறை இந்திய பெண்கள் கபாடி அணி வெள்ளிப்பதக்கத்தை தட்டிவந்த நிலையில், தற்போது தொடர் தீவிர பயிற்சிக்கு பின் தங்கத்தை தனதாக்கினர். வெற்றியுடன் தாயகம் திரும்பிய வீராங்கனைகளுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய கபாடி அணியில் இடம்பெற்ற வீராங்கனை ஸ்னேஹல் ஷிண்டே (Snehal Shinde), நேற்று புனே விமான நிலையம் (Pune Airport) வந்தடைந்தார். அவருக்கு குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், தந்தை பிரதீப் ஷிண்டேவிடம் மகள் ஸ்னேஹல் தனது தங்கப்பதக்கத்தை காண்பித்தபோது, தந்தை ஆனந்த கண்ணீரில் நனைந்து மகளை கட்டியணைத்து தனது பாசத்தை வெளிப்படுத்தினார். PM Modi Perfoms Pooja at Parvati Kund: உத்திரகாண்டில் உள்ள பார்வதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!

அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்னேஹல் ஷிண்டே, "கடந்த 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் நாங்கள் வெள்ளிப்பதக்கம் வென்றோம். இந்த முறை தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளோம்.

இது எனது தந்தையின் கனவு. கடந்த 2014, 2018ல் எனக்கு காயம் ஏற்பட்டது. அனைத்தையும் கடந்து எனது தந்தையின் கனவை நனவாக்கி இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தொடர் உழைப்பு, காயம் என பல கஷ்டங்களை கடந்து அடைந்துள்ள வெற்றி மகிழ்ச்சியை தருகிறது" என கூறினார்.