Praggnanandhaa: வெற்றியை அன்பான அம்மாவுக்கு சமர்ப்பித்த பிரக்யானந்தா; நெகிழவைக்கும் வெற்றி.!
உலகக்கோப்பையை தீர்மானிக்கும் இறுதி விளையாட்டில், உலகில் முதல் செஸ் விளையாட்டு வீரராக இருந்த மாங்னஸ் கார்ல்சன்னை எதிர்கொண்டு இறுதியில் பிரக்யானந்தா இரண்டாவது இடத்தை பிடித்தார்.
ஆகஸ்ட் 26, சென்னை (Sports News): செஸ் விளையாட்டில் இந்திய கிராண்ட்மாஸ்டர் என விவரிக்கப்படும் ரமேஷ்பாபு பிரக்யானந்தா (Ramesh Babu Praggnanandhaa), சமீபத்தில் அஜர்பைஜானில் நடைபெற்ற FIDE உலகக்கோப்பை 2023ல் ரன்னராக தேர்வு செய்யப்பட்டார்.
உலகக்கோப்பையை தீர்மானிக்கும் இறுதி விளையாட்டில், உலகில் முதல் செஸ் விளையாட்டு வீரராக இருந்த மாங்னஸ் கார்ல்சன்னை எதிர்கொண்டு இறுதியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த வெற்றி இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகளவிலும் பாராட்டப்பட்டது. Gun Shot US: வணிக வளாகத்திற்குள் சரமாரி துப்பாக்கிசூடு: 4 பேர் பலி?; மர்ம நபரை சுட்டுக்கொன்ற சிறப்புப்படை.!
கடந்த ஆண்டுகளாகவே செஸ் விளையாட்டில் பிரக்யானந்தாவின் குரல் எங்கும் ஒலித்து வந்த நிலையில், இந்த வெற்றி சர்வதேச அளவில் இந்தியாவின் மீதான நான்பதிப்பையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பிரக்யானந்தா பேசுகையில், தனது வெற்றியை தாயார் நாகலட்சுமிக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது அவர் FIDE உலகக்கோப்பை 2023ல் வெள்ளிப்பதக்கம் பெற்றார். எதிர்வரும் போட்டியில் அவர் உலகக்கோப்பையை பெற தயாராகி வருகிறார். 2024ல் செஸ் போட்டியாளர்கள் தேர்வு ஏப்ரல் 2ம் தேதி முதல் 25ம் தேதி வரை கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.