Gun Fire at Florida (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 27, புளோரிடா (Florida, United States of America): அமெரிக்காவில் தலைதூக்கி இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க நினைத்தாலும், அவை அங்குள்ள மக்களால் ஆண்டுகளாக பாதுகாப்பு கருதி கடைபிடிக்கப்பட்டதால், அது தொடர்பான முயற்சிகளில் பல்வேறு தொய்வுகள் ஏற்பட்டு இருக்கின்றன.

மெக்சிகோ எல்லையை தாண்டி திருட்டுத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழையும் பலரும், சில நேரங்களில் ஆயுதமேந்தி கொள்ளை போன்ற செயல்களிலும் ஈடுபடுவதாலும், ஆயுதமேந்திய கும்பலின் செயல்களில் இருந்து தப்பிக்கவும் என பல காரணங்களால் துப்பாக்கி கலாச்சாரத்தை விட்டு விலக இயலாமல் இருக்கின்றனர். Romania LPG Station Explodes: கியாஸ் விநியோக நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி., 46 பேர் படுகாயம்.! 

இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் இருக்கும் ஜாக்சன்வில்லே (Jacksonville) நகரில், கிங்ஸ் சாலையில் அமைந்துள்ள Dollar General வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார். முதலில் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த கார்களை சுட்டவாறு, அவர் வணிக வளாகத்திற்குள் பயணித்துள்ளார்.

அங்கு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியதில், 4 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்து விரைந்து வந்த அமெரிக்காவின் சிறப்பு ஆயுத தாக்குதல் குழு (SWAT) அதிகாரிகள், எதிராளியை சுட்டு வீழ்த்தினர். அவரின் அடையாளம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.