Sunil Chhetri Retires: முடிவுக்கு வந்த சகாப்தம்.. இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஓய்வு.. ரசிகர்கள் சோகம்..!
இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும் ஜாம்பவானுமாகிய சுனில் சேத்ரி ஓய்வை அறிவித்தார்.
ஜூன் 07, புதுடெல்லி (Sports News): 2002ஆம் ஆண்டு பிரபல கிளப் அணிகளில் ஒன்றான மோகன் பகான் அணியுடன் தனது கால்பந்து பயணத்தை தொடங்கினார் சுனில் சேத்ரி (Sunil Chhetri). அதன்பின் 2005ஆம் ஆண்டு சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அறிமுகமான நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து சாதனை படைத்தார். இவர் இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 94 கோல்களை விளாசி இருக்கிறார். இதன் மூலம் உலகிலேயே அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளார். World Food Safety Day 2024: "தரமான உணவு.. ஆரோக்கியமான வாழ்வு.." உலக உணவு பாதுகாப்பு தினம்..!
இந்நிலையில் 39 வயதாகும் சுனில் சேத்ரி தனது கால்பந்து வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக (Retire) சமீபத்தில் அறிவித்தார். அதன்படி உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் குவைத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக களம் கண்டார். போட்டி கோல்கள் இன்றி டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து சுனில் சேத்ரி கனத்த இதயத்துடன் விடைபெற்றார். சுனில் சேத்ரியின் கடைசி சர்வதேச கால்பந்து ஆட்டம் நேற்று இரவு கொல்கத்தாவின் சால்ட் லேக் திடலில் நடைபெற்றது. அதை நேரில் காண 50,000க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.