Virat Kohli Retirement (Photo Credit: @incricketteam X)

மே 12, சென்னை (Sports News): இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. பின்னர், பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இதனால், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மூத்த வீரரான விராட் கோலியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், ரோஹித் சர்மா திடீரென தனது ஓய்வை அறிவித்தார். IPL 2025 Suspended: ஐ.பி.எல் 2025 போட்டிகள் ஒத்திவைப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

விராட் கோலி ஓய்வு:

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியை அறிவிப்பதற்கு முன்பாக, தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி (Virat Kohli Retirement) அறிவித்துள்ளார். விராட் கோலி, இந்திய அணிக்காக, இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில், 46.85 சராசரியுடன், 30 சதம், 31அரைசதம் உட்பட 9,230 ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி:

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)