
ஜூன் 02, பிரிட்டோரியா (Sports News): தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் (Heinrich Klaasen), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதாகும் அவர், தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானர். PBKS Vs MI: மும்பைக்கு முட்டுக்கட்டைபோட்ட மழை? ரசிகர்கள் ஏமாற்றம்.!
கிளாசன் ஓய்வு:
இதுவரை 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43.69 சராசரியுடன் 2141 ரன்கள் எடுத்துள்ளார். 58 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1,000 ரன்கள் எடுத்தார். மேலும், 4 டெஸ்ட் போட்டிகளில் 104 ரன்கள் அடித்துள்ளார். தற்போது, தென்னாப்பிரிக்க அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசன்:
View this post on Instagram