
மே 12, சென்னை (Sports News): இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. பார்டர் கவாஸ்கர் கோப்பையிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இதனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மூத்த வீரரான விராட் கோலியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரோஹித் சர்மா திடீரென தனது ஓய்வை அறிவித்தார்.
விராட் கோலி ஓய்வு:
இதனை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலியும் (Virat Kohli Retirement) அறிவித்தார். விராட் கோலி, இந்திய அணிக்காக, இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில், 46.85 சராசரியுடன், 30 சதம், 31அரைசதம் உட்பட 9,230 ரன்கள் எடுத்துள்ளார். கிரிக்கெட் வீரர்களின் இந்த தொடர் ஓய்வு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Virat Kohli: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி.. ரசிகர்கள் ஷாக்..!
அனுஷ்கா ஷர்மாவின் பதிவு :
இந்த நிலையில் விராட் கோலியின் ஓய்வு குறித்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "உங்களின் சாதனைகள் குறித்து தான் அனைவரும் பேசுவார்கள். ஆனால் வெளியில் காட்டாத கண்ணீர், யாரும் பார்க்காத போராட்டங்கள், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு போன்றவை எப்போதும் என் நினைவில் நிலைத்தது நிற்கும். இப்பயணத்தை அருகில் இருந்து பார்த்தது எனக்கு கிடைத்த பெருமை" என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram