Women IND Vs BAN: இன்று மாலை தொடங்குகிறது இந்தியா Vs வங்காளதேசம் பெண்கள் கிரிக்கெட் போட்டி; நேரலையில் பார்ப்பது எப்படி?.. விபரம் இதோ.!

இந்தியாவும் - வங்கதேசமும் மோதிக்கொள்ளும் ஆட்டம் கடந்த போட்டிகளின் காரணமாக விறுவிறுப்பு பெற்றுள்ளது.

Women Cricket Team India (Photo Credit: Twitter)

செப்டம்பர் 24, ஹாங்ஜூ (Cricket News): 19வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் (Asian Games 2023) சீனாவில் உள்ள ஹாங்ஜூ மாகாணத்தில் வைத்து நடைபெற்றுகின்றது. இதற்காக ஆசிய நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் சீனா பயணித்துள்ளனர்.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு அனுமதி கொடுக்க மறுத்து எழுந்த சர்ச்சையால், இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரின் பயணத்தை இரத்து செய்து அறிவித்தார். பின் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. Gmail Update: ஜி-மெயிலில் தேவையற்ற செய்திகளை ஒரே கிளிக்கில் இனி டெலீட் செய்யலாம்: கூகுள் அதிரடி அறிவிப்பு.! 

இந்நிலையில், இன்று மாலை இந்திய நேரப்படி 06:30 மணியளவில் ஆசிய கிரிக்கெட் கோப்பைக்கான போட்டி நடைபெறுகிறது. ஹாங்ஜூ மாகாணத்தில் உள்ள Pingfeng Campus Cricket மைதானத்தில் வைத்து பெண்கள் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

IND Vs BAN Women Cricket Asia Games (Photo Credit: Twitter)

இதில் தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் - வங்கதேச அணியும் மோதிக்கொள்கின்றன. ஏற்கனவே இந்தியா - வங்கதேச போட்டியின்போது கடுமையான சண்டை மைதான அளவில் நடந்தது. இதனால் இன்றைய போட்டி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த போட்டியை வீட்டில் இருந்தபடி Sony Sports தொலைக்காட்சியில் காணலாம். Sony LIV செயலியின் மூலமாகவும் நேரலையில் பார்க்கலாம். ஸ்மார்ட் டிவி வைத்துள்ளார் Sony LIV செயலியை டிவியில் பதிவிறக்கம் செய்தும் நேரலையை பார்க்கலாம்.