Jadeja Admits the Mistake: எஸ்.கான் ரன் அவுட்க்கு காரணம் நானே - தவறை ஒப்புக்கொண்ட ஜடேஜா; இன்ஸ்டாகிராமில் வருந்தி பதிவு.!
அதே வேளையில், நொடியில் அந்த ஆட்டத்தை தலைகீழாக மாற்றும் நிலையும் வரலாம். எஸ்.கான் அதிரடியாக விளையாடுகிறார் என நினைத்தபோது, ஜடேஜாவின் தவறால் அவர் ஆட்டமிழவேண்டிய சூழல் நேற்று உண்டானது.
பிப்ரவரி 16, ராஜ்கோட் (Gujarat News): இந்தியா - இங்கிலாந்து (India Vs England Test Series) அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. நேற்று போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்ததை தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் திறம்பட விளையாடி வருகின்றனர். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணியின் சார்பில் 86 ஓவர்கள் வீசப்பட்டன. ஐந்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 326 ரன்கள் சேர்த்திருந்தது. ஆட்டத்தின் முதல் நாளான நேற்று, இந்திய அணியின் சார்பில் விளையாடிய ஜெய்ஸ்வால் 10 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத்தொடர்ந்துm ரோகித் சர்மா 196 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அசத்தி வெளியேறினார்.
சர்ஃபராஸ் கான் ரன் அவுட்: கில் ஒன்பது பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காமலும், படிதார் 15 பந்துகளில் 5 ரன்கள் அடித்தும் வெளியேறினர். ரவீந்திர ஜடேஜா 212 பந்துகளில் 110 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். தற்போது ஜடேஜா - கே.எல் ராகுல் ஜோடி களத்தில் இருக்கிறது. ஜடேஜாவும் - சர்ஃபராஸ் (Sarfaraz Khan Run Out) கானும் ஜோடியாக விளையாடிய போது, சர்ஃபராஸ் கான் ரன் அவுட் ஆக நேர்ந்தது. அதற்கு ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja ) முழு பொறுப்பேற்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார். Boy Died by Heart Attack: 9 வயது சிறுவன் மாரடைப்பால் பரிதாப பலி; திருப்பதி சென்று வீடுதிரும்பும்போது சோகம்.!
இன்று இரண்டாவது நாள் ஆட்டம்: நேற்றைய ஆட்டத்தில் 66 பந்துகளில் 62 நாட்களில் அடித்து அசத்தியிருந்த சர்ஃபராஸ் கான், ரன் எடுக்கும் முயற்சியின்போது அவுட்டாகினார். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெறும் நிலையில், இந்திய அணி ஐந்து விக்கெட்டை கைவசம் வைத்திருப்பதால் எஞ்சிய ஆட்டக்காரர்களின் திறம்பட விளையாடி அணியின் ரன்களை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
நேரலையில் காண: இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு புள்ளிகள் பெற்று ஆட்டத்தை சமநிலையில் வைத்துள்ளதால் எஞ்சிய மூன்று ஆட்டங்களும் இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பலப்பரிட்சை நடக்கிறது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (Sports 18, Jio Cinema App) செயலி வாயிலாக நேரலையிலும், மைதானத்திற்கு சென்று நேரிலும் போட்டியை ஆவலுடன் கண்டுகளித்து வருகின்றனர்.