ICC CWC 2023 Semifinal IND Vs NZ: இன்று மதியம் 2 மணியளவில் தொடங்குகிறது இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஆட்டம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?..!
இதனை நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் காணலாம்.
நவம்பர் 15, சென்னை (Sports News): 50 ஓவர்கள் கொண்ட, 13வது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் (ICC Cricket Worldcup 2023) தொடர் 2023 கோலாகலமாக தனது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தியாவில் நடைபெற்று வந்த போட்டிகளில், புள்ளிப்பட்டியலின் அடிப்படையில், தற்போது அரையிறதுக்கு இரண்டு பிரிவுகளாக இந்தியா-நியூசிலாந்து (Indai Vs New Zealand), தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா (South Africa Vs Australia) ஆகிய அணிகள் முன்னேறியிருக்கின்றன.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் பிரிவில் மோதிக்கொள்ளும் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். அதேபோல, நாளை நடைபெறும் தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். Subrata Roy: 12 இலட்சம் பணியாளர்கள்.. கால்பதிக்காத துறைகளே இல்லை: சகாரா குழுமத்தின் நிறுவனர் மறைவு.. யார் இந்த சுப்ரதா ராய்?..!
இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியும் - நாளைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தி கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 பட்டத்தை வெல்லும். இந்தியா தலைமை ஏற்று நடத்திவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், 10 நாடுகளைச் சார்ந்த அணிகள் கலந்து கொண்டு திறம்பட விளையாடின. தற்போது புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் முன்னேறியுள்ள நான்கு அணிகளும், அடுத்தடுத்து இன்று மற்றும் நாளை மோதிக் கொள்வதால் இப்போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இறுதிப்போட்டி (ICC CWC 2023 Final) நவம்பர் 19 அன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இன்று மதியம் 2 மணி அளவில் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இதனை நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வாயிலாகவும், ஆன்லைனில் ஹாட் ஸ்டார் செயலிகளிலும் பார்க்கலாம்.
இந்திய அணியின் (Team India Squad Semifinal ICC CWC 2023 Against NZ) சார்பில் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, மாட் ஹென்றி, டிரென்ட் போல்ட் ஆகியோர் விளையாடுகின்றனர்.