CWC 2023 IND Vs BAN: இந்தியா - வங்கதேச அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று நடைபெறுகிறது.. முழு விபரம் இதோ.!
அக்.19 ம் தேதியான இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இந்தியா - வங்கதேச அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெறுகிறது.
அக்டோபர் 19, மும்பை (Sports News): ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 (ICC Cricket World Cup 2023) இந்தியாவில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. போட்டியை இந்தியா தனி நாடாக நடத்துவதால், இந்தியாவில் உள்ள வெவ்வேறு மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
10 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுக்கொண்ட போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டு, பின் அதில் 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டிக்குள் நுழையும்.
நடப்பு ஆண்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் இந்தியா புள்ளிப்பட்டியலில் தொடக்கத்தில் இருந்து முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா தான் பங்கேற்ற 3 போட்டிகளிலும் அபார வெற்றி அடைந்தது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. Lokesh Thanks to Vijay: எனது விருப்பத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த அண்ணனுக்கு நன்றி - நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன லோகேஷ்.. விபரம் உள்ளே.!
இந்நிலையில், அக்.19 ம் தேதியான இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா - வங்கதேச (IND Vs BAN) அணிகள் மோதிக்கொள்ளும் 17வது போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை நாம் வீட்டில் இருந்தபடி Star Sports தொலைக்காட்சி வாயிலாகவும் நேரலையில் காணலாம். அதேபோல, Disney + Hotstar செயலியில் பார்க்கலாம்.
வங்கதேசம் அணியை பொறுத்தமட்டில் நடப்பு உலகக்கோப்பை சீசனில் கலந்துகொண்ட 4 போட்டிகளில், ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. இன்றைய போட்டியில் வங்கதேச அணியின் நிலை என்ன என்பது, இன்று நடைபெறும் ஆட்டத்தில் உறுதியாகும். இந்தியாவும் உலகக்கோப்பையை வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா (Rohit Sharma), ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடுகின்றனர்.
வங்கதேச அணியின் சார்பில் ஷாகிப் அல் ஹசன், நஜ்முல் ஹொசைன், லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிரிடோய், தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோம்ரிஃபுல் ரஹ்மான், ஷோம்ரிஃபுல் இஸ்லாம், மற்றும் தன்சிம் ஹசன் சாகிப் ஆகியோர் விளையாடுகின்றனர்.