Thalapathy Vijay | Director Lokesh Kanagaraj (Photo Credit: Twitter)

அக்டோபர் 19, சென்னை (Cinema News): லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில், விஜய் (Thalapathi Vijay) நடிப்பில், அனிரூத் (Anirudh Ravichandar) இசையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் (Seven Screen Studios) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ (Leo).

அக்.19ம் தேதியான இன்று லியோ (Leo) திரைப்படம் உலகளவில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் (Vijay Fans) முதல் நாள் காட்சியை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நள்ளிரவு 01:00 மணிமுதல் படம் திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட வரும் நிலையில், தமிழ்நாட்டில் (Tamilnadu) மட்டும் அரசின் அனுமதிப்படி காலை 09:00 முதல் காட்சி தொடங்குகிறது.

நள்ளிரவு 01:30 மணிவரையில் நாளுக்கு 5 காட்சிகளாக, அக்.15ம் தேதி வரை திரையிட்டுக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் இலாப நோக்கம் இறுதிக்கட்டத்தில் பல திரையரங்கில் படம் வெளியாகுமா? என்ற கேள்வியை எழுப்பியது. Rohit Sharma Gets 3 Traffic Challans: மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பயணம்; ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதித்த மகாராஷ்டிரா காவல்துறை.! 

Thalapathy Vijay (Photo Credit: Twitter)

மேலும், தயாரிப்பு நிறுவனம் வழக்கத்தை விட திரையரங்க உரிமையாளர்களிடம் ஒருவார வசூலில் 80% பங்கு கேட்டு இருக்கிறது. இதனால் பல திரையரங்குகள் லியோவை திரையிடவில்லை. ஒருசில திரையரங்குகள் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, 65% - 75% பங்கு தருவதாக ஒப்புக்கொண்டு படத்தை திரையிட அனுமதி பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "லியோ திரைப்படத்தை எனது பாணியில் உருவாக்க முழுவதுமாக ஒத்துழைத்த அண்ணன் விஜய்க்கு நன்றி. என்னுடன் பணியாற்றிய படக்குழுவினர், தயாரிப்பு நிறுவனம் ஆகியோருக்கும் நன்றி.

படம் ரசிகர்களான உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதை நான் அறிகிறேன். திரையரங்கில் படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் படம் பிடிக்கும் என நினைக்கிறன். படம் Lokesh Cinematic Universe (LCU) ஆ? இல்லையா? என்பதை படம் தயாரான சில நிமிடங்களில் தெரிந்துகொள்வீர்கள்" என கூறியுள்ளார்.