ICC CWC 2023: படுதோல்வி அடைந்த நெதர்லாந்து: அடுத்தடுத்த அரையிறுதி போட்டிகள்.. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023..!

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை, ஒற்றை நாடாக சிறப்பாக நடத்தி வரும் இந்தியா, 2023 கோப்பையை வெல்லும் என கிரிக்கெட் ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து வருகின்றனர்.

Virat Kohli | Rohit Sharma (Photo Credit: X)

நவம்பர் 13, பெங்களூர் (Cricket News): 13வது ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் (ICC Cricket World cup 2023) தொடர், இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்றுடன் தகுதிச்சுற்று ஆட்டங்கள் அனைத்தும் நிறைவுபெற்றது. நவம்பர் 15ம் தேதி இந்தியா - நியூசிலாந்து (India Vs New Zealand) அணிகளும், 16ம் தேதி ஆஸ்திரேலியா - தென்னாபிரிக்க (Australia Vs South Africa) அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைய பலபரீட்சை நடத்துகின்றன.

நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றி அடைந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி (Team India) பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்த இந்திய அணி, 410 ரன்கள் எடுத்து. 411 ரன்கள் நெதர்லாந்து அணிக்கு (Team Netherlands) இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்திய அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் ரோஹித் சர்மா (Rohit Sharma) 54 பந்துகளில் 61 ரன்னும், ஹில் 32 பந்துகளில் 51 ரன்னும், விராட் (Virat Kohli) 56 பந்துகளில் 51 ரன்னும், ஸ்ரேயாஸ் 94 பந்துகளில் 128 ரன்னும், ராகுல் 64 பந்துகளில் 102 ரன்னும் அடித்திருந்தனர். 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 47.5 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 250 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. Young Women Raped by 5 Friends: நள்ளிரவில் துரோகியான நண்பர்கள்: பெண்ணுக்கு மதுவை ஊற்றி ஐவர் கும்பல் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.! 

Team India | ICC CWC 2023 (Photo Credit: X)

அந்த அணியின் சார்பில் விளையாடிய மேக்ஸ் 42 பந்துகளில் 30 ரன்னும், கோளின் 32 பந்துகளில் 35 ரன்னும், சைபிராண்ட் 80 பந்துகளில் 45 ரன்னும், தேஜா 39 பந்துகளில் 54 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். பல வீரர்களின் சொதப்பல் ஆட்டம், அணியின் தோல்விக்கு வழிவகை செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சும் தரமாக இருந்ததால், நெதர்லாந்து அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளவும் இயலவில்லை. சொற்ப அளவிலான வீரர்களே நின்று ஆடினர்.

புள்ளிபட்டியலின்படி, தனக்கு எதிரான 9 போட்டிகளிலும் அபார வெற்றிபெற்ற இந்திய அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றன. தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளில் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 9ல் 7 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. நியூசிலாந்து 5 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை, ஒற்றை நாடாக சிறப்பாக நடத்தி வரும் இந்தியா, 2023 கோப்பையை (ICC CWC 2023 Final) வெல்லும் என கிரிக்கெட் ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து வருகின்றனர். அதேவேளையில், தகுதிப்போட்டிகளில் எதிரணிகளை ஓடவிட்டு, அரையிறுதியிலோ அல்லது இறுதிப்போட்டியிலோ இந்தியா சரியான வகையில் எதிர்கொள்ளாத பட்சத்தில் இந்திய ரசிகர்களுக்கு சோகமே மிஞ்சும். ஆகையால், கட்டாயம் இந்திய அணி வெற்றிபெறவேண்டிய சூழ்நிலையில் உள்ளது.