ENG Vs OMA: 47 ரன்களில்சுருண்டுபோன ஓமன் அணி; 3.1 ஓவர் முடிவில் ஆட்டத்தை முடித்த இங்கிலாந்து.. அசத்தல் வெற்றி.!

20 ஓவர் கொண்ட போட்டியை 4 ஓவருக்குள் நிறைவு செய்த இங்கிலாந்து அணியின் அசத்தல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

ENG Vs OMA | ICC T20 World Cup 2024 (Photo Credit: @ToiSports X)

ஜூன் 14, ஆண்டிகுவா (Sports News): அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) போட்டியின் 28 வது ஆட்டம், நேற்று ஆண்டிகுவாவில் உள்ள மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஓமன் - இங்கிலாந்து (ENG Vs OMA) அணிகள் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த ஓமன் அணி 13.2 ஓவர் முடிவில் 47 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில், சோயிப் கான் மட்டுமே 23 பந்துகளில் 11 ரன்கள் அடித்திருந்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களிலும் வெளியேறியதால், அணியின் ஒட்டுமொத்த ரன்கள் 47ல் நிறைவு பெற்றது. Ajit Doval Appointed as the National Security Adviser: தொடர்ந்து 3-வது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமனம்..!

இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி:

இதனையடுத்து, 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மிகமிக எளிய இலக்கை எதிர்கொண்ட இங்கிலாந்து அணியின் வீரர்கள், அதிரடி ஆட்டத்தால் 3.1 ஓவரில் ஆட்டத்தை நிறைவு செய்தனர். எனினும் 2 விக்கெட்டை இங்கிலாந்து இழந்து இருந்தது. இங்கிலாந்து அணியின் பில் 3 பந்துகளில் 12 ரன்னும், ஜோஸ் 8 பந்துகளில் 24 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். இறுதியில் 3.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தனர். இந்த வெற்றி இங்கிலாந்துக்கு எளிதில் கிடைத்ததால், அணியினர் உற்சாகம் அடைந்தனர். படுதோல்வி அடைந்த ஓமன் அணியின் வீரர்கள், கலங்கிப்போயிருந்தனர். Maruti Teases New CNG Coming Soon: சிஎன்ஜி காரில் மாற்றத்தை கொண்டு வரப்போகும் மாருதி.. வெளியான டீசர்..!

தோல்விக்கான காரணம் என்ன?

ஓமன் அணியின் சார்பில் பேட்டிங் செய்த தொடக்க ஆட்டக்காரர்கள் ப்ரதீக், இலியாஸ் ஆகியோர் 3.3 ஓவருக்குள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது அணியினருக்கு தடுமாற்றத்தை வழங்கியது. அதேபோல, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு, களத்தை சூடேற்றி பார்த்ததால் மனரீதியான பய உணர்வு ஓமன் அணியினரை நேரடியாக பாதித்து, அடுத்தடுத்த விக்கெட்டுகளை ஏற்படுத்தியது. தொடர் விக்கெட்டால் பெரும் சரிவை சந்தித்த ஓமன் அணியில், சோயிப் கான் தனது விக்கெட்டை இழக்கவிடாமல் 23 பந்துகள் பிடித்து நின்று ஆடி 11 ரன்கள் எடுத்தாலும், அவரும் இறுதியாக 13 ஓவரில் ஆர்ச்சரின் பந்துகளை எதிர்கொண்டு ஜோஸிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். விளையாட்டுகளை பொறுத்தமட்டில் தொடக்க ஆட்டக்காரர்கள் உறுதித்தன்மை அணியை வெற்றிப்பாதைக்கு பெருமளவு அழைத்து செல்லும். அதேவேளையில் அடுத்தடுத்த சொதப்பல் மற்றும் ரசிகர்களின் ஆரவாரமில்லாத பேரமைதி, வெற்றிபெற வாய்ப்புள்ள அணியையும், அதற்காக போராடும் அணியையும் தோல்விக்கு நொடியில் அழைத்துசென்றுவிடும்.