Formula 4 Race: கார் ரேஸுல நானும் கலந்துக்கலாமா? பார்முலா 4 பந்தயப்பாதையில் பவனி வந்த நாய்.!

அமைச்சர் கொடியசைத்து கார் பந்தய போட்டியை தொடங்குவதற்கு முன்பு, நாய் ஒன்று திடீரென ரேஸிங் பாதையில் குறுக்கே புகுந்த சம்பவம் நடந்துள்ளது.

Formula 4 Race in Chennai | Dog Enters (Photo Credit: @TheFederal_News / @alexthamizh X)

செப்டம்பர் 01, சென்னை (Chennai News): தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேசிங் புரோமோஷன் நிறுவனம் சார்பில், சென்னையில் பார்முலா 4 கார் (Formula 4 Street Race Chennai) இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ஸ்ட்ரீட் ரேஸிங் லீக் போட்டிகள் இன்று முதல் நடைபெறுகின்றன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்புடன் செய்யப்பட்டுள்ள நிலையில், எப்ஐஏ சார்பில் நேற்று இரவு அனுமதி வழங்கப்பட்டது. தீவுத்திடலில் தொடங்கும் போட்டி, போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்திடலை வந்தடையும். இதன் மொத்த தூரம் 3.7 கி.மீ ஆகும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து நேற்று பயிற்சி சுற்றை தொடங்கி வைத்தார். நேற்று பயிற்சி சுற்று என்பதால் பலர்க்கும் அனுமதி இலவசமாக வழங்கப்பட்டது. பார்வையாளர்கள் பலரும் திரண்டு வந்து போட்டிகளை கண்டுகளித்தனர். Moto G35 5G: அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் உள்ளே..!

தெற்காசியாவில் முதல் முறை:

இன்று முதல் தகுதிச்சுற்றுகள் தொடங்கி அடுத்தடுத்து விறுவிறுப்புடன் போட்டிகள் நடைபெறும் நிலையில், பார்வையாளர்களுக்கு முன்னதாகவே டிக்கெட் ஆன்லைனில் விற்பனைக்கு விடப்பட்டது. குறைந்தபட்சமாக ரூ.2000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரையிலும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பார்வையளர்கள் பலரும் இன்று போட்டி நடைபெறும் இடத்திற்கு வர தயாராகி இருக்கின்றனர். ஆசியாவிலேயே இரவு நேர பார்முலா பந்தயம் சென்னையில் தான் முதன் முதலாக நடத்தப்படுகிறது என்பதால், கார் ரேஸ் விரும்பிகளும் அங்கு குவிந்துள்ளனர்.

குறுக்கே புகுந்த கௌசிக்:

இதனிடையே, போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நாய் ஒன்று திடீரென பயிற்சி வழித்தடத்தில் புகுந்தது. இதனைக்கண்ட பார்வையாளர்கள் பலரும் கூக்குரலிட்டு நாயை ஆரவாரப்படுத்தி கலாய்த்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் மற்றும் போட்டி நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு நாயை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

பார்முலா 4 ரேஸ் பயிற்சி வீடியோ:

பந்தயப்பாதையில் திடீரென புகுந்த நாய்:

தமிழ்நாடு இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பார்முலா 4 கார் பந்தய பயிற்சி சுற்றுகளை கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி: