Moto G35 5G (Photo Credit: @ZionsAnvin X)

ஆகஸ்ட் 31, சென்னை (Technology News): மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தனது ‘G’ தொடரில் மோட்டோ ஜி55 5ஜி (Moto G55 5G) மற்றும் மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G Smartphone) ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு மொபைல்களும் உலக சந்தையில் நேற்று (ஆகஸ்ட் 30) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது முதலில் ஐரோப்பாவில் விற்பனைக்கு கிடைக்கும். பின்னர் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும். இதில், மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களையும் இதில் பார்க்கலாம்.

விலை:

மோட்டோரோலா தனது மோட்டோ ஜி35 5ஜி புதிய ஸ்மார்ட்போனை, உலக சந்தையில் விலை €199, இந்திய மதிப்பில் ரூ.18,500 ஆகும்.

தற்போது, ​​ஐரோப்பாவில் இந்த போனை கொய்யா ரெட், மிட்நைட் பிளாக் மற்றும் லீஃப் கிரீன் வீகன் லெதர் ஆகிய நிறங்களில் வாங்கலாம். Google Doodle: பாரா ஒலிம்பிக் 2024 போட்டிகள் தீவிரம்; கூடைபந்துக்கான சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

சிறப்பம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போன் ரவுண்ட்-எட்ஜ் பிளாட் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, 6.72 அங்குல அளவு கொண்ட பெரிய திரையை நிறுவியுள்ளது. டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீத வெளியீட்டை வழங்கும் திறன் கொண்ட IPS LCD பேனலை கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 14-யில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், தனிப்பயனாக்கப்பட்ட Hello UI கிடைக்கிறது. புதிய மொபைல் சிப்செட் யூனிசாக் T760 பொருத்தப்பட்டுள்ளது. புதிய HMD Crest மற்றும் Crest Max ஸ்மார்ட்போன்களும் சிப்செட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், 4GB RAM உடன், 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 256GB இண்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகைகளும் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போனின் பின் பேனலில் இரண்டு கேமரா சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் 50MP பிரைமரி லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ராவைடு ஆங்கிள் லென்ஸை ஆதரிக்கின்றது. செல்பி மற்றும் வீடியோவிற்கு 16MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி திறன்கொண்ட, 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதி உள்ளது.