PAK Vs ENG 3rd Test: பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரம்.. இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட்..!
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அக்டோபர் 24, ராவல்பிண்டி (Sports News): பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து (PAK Vs ENG 3rd Test, Day 1) அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 24) ராவல்பிண்டியில் (Rawalpindi) 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. INDW Vs NZW: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட்.. நியூசிலாந்து மகளிர் அணி அபாரம்..!
இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி 29, ஒல்லி போப் 3, ஜோ ரூட் 5, ஹாரி புரூக் 5, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) 12 ரன்கள் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். இந்நிலையில், இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் (Ben Duckett) 84 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 118 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் (Jamie Smith) மற்றும் வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் (Gus Atkinson) இணைந்து விளையாடி 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கஸ் அட்கின்சன் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிறப்பாக விளையாடிய ஜேமி ஸ்மித் 119 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். இறுதியில், இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் ஸ்பின்னர்களான சஜித் கான் (Sajid Khan) 6, நோமன் அலி (Noman Ali) 3 மற்றும் ஷகித் (Zahid Mahmood) 1 ஆகியோர் கைப்பற்றினர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 89 ரன்கள் அடித்தார். இதன்பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரம்: