INDW Vs NZW 1st ODI (Photo Credit: @weRcricket X)

அக்டோபர் 24, அகமதாபாத் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் (INDW Vs NZW 1st ODI) அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 24) அகமதாபாத்தில் (Ahmedabad) உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. டி20 உலகக்கோப்பை சாம்பியன் என்ற பட்டம் வென்ற உத்வேகத்துடன் நியூசிலாந்து அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. IND Vs NZ 2nd Test: நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்.. அஸ்வின், சுந்தர் அபார பந்துவீச்சு..!

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) வெறும் 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனிடையே சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. இந்திய அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அதிகபட்சமாக தேஜல் (Tejal Hasabnis) 42 ரன்களும், தீப்தி சர்மா (Deepti Sharma) 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி 44.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 228 ரன்கள் நிர்ணயம் செய்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் அமெலியா கெர் (Amelia Kerr) 4, ஜெஸ் கெர் 3, கார்சன் 2, சுசி பேட்ஸ் 1 விக்கெட்களை வீழ்த்தினர்.