IND Vs ENG Test: இமாலய இலக்கை நெருங்குமா இங்கிலாந்து?.. நாளை நடக்கப்போவது என்ன?..!

இந்திய அணி குவித்துள்ள இமாலய இலக்கை இங்கிலாந்து நெருக்கமா? என்பது நாளை தெரியவரும் என்பதால் இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் ஆட்டம் விறுவிறுப்பு பெற்றுள்ளது.

India vs England (Photo Credit: @cricbuzz X)

பிப்ரவரி 04, விசாகப்பட்டினம் (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, பிப்ரவரி 02 முதல் இரண்டாவது டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்கள் குவித்தது, இங்கிலாந்து அணி 253 ரன்கள் எடுத்து ஆள் அவுட் ஆகியது. பின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 255 ரன்கள் குவித்தன. பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் குவித்துள்ளது. Israel Palestine War: தாய்-தந்தை, உறவினர்களை இழந்து தனிமையில் வாடும் 17000 குழந்தைகள்; 5 மாத போரில் நடந்த சோகம்.! 

வெற்றிபெறுமா இங்கிலாந்து? நாளை ஆட்டம் தொடங்கி எஞ்சிய 9 விக்கெட் வைத்துக்கொண்டு விளையாடும். இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 332 ரன்கள் எடுக்க வேண்டும். இதனால் நாளைய ஆட்டம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு இன்னிங்க்ஸை பொறுத்தமட்டில் இந்திய அணியின் சார்பில் விளையாடியவர்களில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 290 பந்துகளில் 209 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். பிற யாரும் அரைசதத்தை தாண்டவில்லை. இரண்டாவது இன்னிங்சில் சுப்னம் மட்டுமே 147 பந்துகளில் 104 ரன்கள் அடித்து இருந்தார். இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஜாக் க்ராவ்லே மட்டும் 78 பந்துகளில் 76 ரன்கள் அடித்து இருந்தார்.