IND Vs ENG Test Update: கில்லியாக சொல்லியடித்த இந்தியா: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி..!
5 டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முதல் போட்டியில் வென்றாலும், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் அதிரடி செயல்பாடுகள் எதிரணியை திணறவைத்துள்ளது.
பிப்ரவரி 05, விசாகப்பட்டினம் (Sports News): பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்த்து நம் மண்ணில் அடுத்தடுத்து விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து (IND Vs ENG Test Series) அணி தனது வெற்றியை தக்கவைத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தினால் ஆட்டம் நம்வசமாகியுள்ளது.
இரட்டை சதத்தை கடந்த ஜெய்ஷ்வால்: கடந்த பிப்.02 அன்று இந்தியா - இங்கிலாந்து அணி இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சின் முடிவில் இந்தியா 396 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஷ்வால் (Yashasvi Jaiswal) இரட்டை சதத்தை கடந்து அசத்தி இருந்தார். அதனைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 255 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணிக்கு மொத்தமாக 399 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. Big Discount On Apple iPhone 15: காதலர் தின சிறப்பு.. ஆப்பிள் ஐபோன் விலை குறைப்பு..!
தீவிர போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள்: நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சேர்த்திருந்தது. அதனைத்தொடர்ந்து இன்று தொடங்கிய ஆட்டத்தில் அடுத்தடுத்து இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தாலும், ரன்கள் குவிப்பில் ஈடுபட்டது. உணவு இடைவேளைக்கு முன்பு வரை 8 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து 279 ரன்கள் சேர்த்து இருந்தது. இன்னும் 120 ரன்கள் தேவை என்ற நிலையில் 2 விக்கெட் எஞ்சி இருந்தபோதிலும், இங்கிலாந்து 69.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 292 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.
வெற்றி நமதே: இதனால் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி தோல்வியுற்றாலும், இரண்டாவது போட்டியில் அபார வெற்றி அடைந்துள்ளது. இப்போட்டிகளை தொலைக்காட்சி வாயிலாக ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் நேரலையிலும், செயலியில் ஜியோ (Jio Cinema) சினிமாவிலும் கண்டுகளிக்கலாம்.
அடுத்த போட்டி பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி 19ல் நிறைவு பெறுகிறது. இந்த போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட், சவுராஷ்டிரா கிரிக்கெட் வாரியத்திற்கு சொந்தமான மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.