IND Vs ENG Test Series: விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அசத்தல் அப்டேட் இதோ.!
தனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் தொடரில் விலகியதை தொடர்ந்து, ரஜத் படிதார் அணியில் இடம்பெற்றுள்ளது வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 24, ஹைதராபாத் (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டெஸ்ட் தொடர்களில் மோதுகிறது. இந்த டெஸ்ட் தொடர்களின் முதல் ஆட்டம் ஜனவரி 25ம் தேதி நாளை தொடங்கி, 29-இல் முடிகிறது. முதல் ஆட்டம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர களப்பயிற்சி எடுத்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து இரண்டாவது ஆட்டம் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிப்ரவரி 2 அன்று தொடங்கி 6 அன்று நிறைவு பெறுகிறது, இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வைத்து நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரின் மூன்றாவதாக ஆட்டம் பிப்ரவரி 15 முதல் 19 வரையில் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது, நான்காவது ஆட்டம் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. Korattur Accident: சிக்னலை மதிக்காத சென்னை மாநகர பேருந்து ஓட்டுனரால் சோகம்; தலைநசுங்கி இளம்பெண் உயிரிழப்பு.!
இங்கிலாந்து அணி: இறுதி மற்றும் ஐந்தாவது போட்டி மார்ச் 7ஆம் தேதி தர்மசாலா மைதானத்தில் தொடங்கி 11ம் தேதியில் நிறைவு பெறுகிறது. இந்த ஐந்து ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெறுவதற்கான தீவிர முனைப்புடன் களமிறங்கும் என்பதால், ஆட்டம் விறுவிறுப்பை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியை பொறுத்தமட்டில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடருக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டேர்சன், ரெஹான் அகமது, கஸ் அட்கிசன், ஜானி பேர்ஸ்டுவ், ஷோயப் பஷீர், ஜாக் கிராலி, பென் டகெட், பென் போக்ஸ், டான் லாரன்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், போப், ராபின்சன், ஜோ ரூட் , மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். Thoothukudi Shocker: கோழி மேய்ந்த தகராறால் வந்த வினை; பயங்கர சண்டையில் முதியவர் வெட்டிக்கொலை.!
இந்திய அணி: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் சுப்னம் கில், எஸ் ஜெய்ஸ்வால், விராட் கோலி, எஸ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ் பாரத், துருவ் ஜீரல், ஆர் அஸ்வின், ஆர் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகம்மத் சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. பிசிசிஐ-யும் தற்போது வரை முதல் இரண்டு டெஸ்ட் தொடர்களுக்கான விளையாட்டு வீரர்களையே அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, விராட் கோலிக்கு பதிலாக அணியில் ரஜித் படிதார் இணைக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிகளை நேரலையில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சிகளிலும், ஜியோ சினிமா செயலியிலும் காணலாம்.