IND Vs PAK: இந்தியா-பாகிஸ்தான் பரபரப்பை மீண்டும் தண்ணீர் ஊற்றி அணைக்குமா மழை?.. நடக்கப்போவது என்ன?..! இன்றைக்கு போட்டி உறுதி..!
இன்று மழை பெய்தால் ஆட்டம் முடித்து வைக்கப்படும்.
செப்டம்பர் 11, கொழும்பு (Cricket News): ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 (Asia Cup 2023) போட்டித்தொடரில், 13 ஒருநாள் கிரிக்கெட் (One Day Innings) போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் மோதும் 9 வது ஆட்டம் நடைபெற்றது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்று பாகிஸ்தான் (IND Vs PAK) பீல்டரிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்தது. 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 147 ரன்கள் எடுத்து. ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால், இன்று ரிசர்வ் டே முறையில் ஆட்டம் நின்றுபோன இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கப்படும்.
இன்று மதியம் 03:00 மணியளவில் மீண்டும் ஆட்டம் தொடங்கும். அப்போதும் மழை குறுக்கீடும் பட்சத்தில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டு ஆட்டம் முடித்து வைக்கப்படும். காலை முதலாகவே ஆட்டம் நடைபெறும் ஆர். பிரேமதாசா மைதானத்தில் மழை பெய்து கொண்டு இருந்தது. Realme C51 Launch: பிளிப்கார்டில் நள்ளிரவு தொடங்குகிறது ரியல்மி C51 விற்பனை; பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற அசத்தல் ஸ்மார்ட்போன்..! விபரம் இதோ..!
மேகமூட்டத்துடன் சூழ்நிலை காணப்படுவதால், இன்றைய இந்தியா-பாகிஸ்தான் ஆட்டமும் தடைபடும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்தியா Vs பாகிஸ்தான் என்றாலே எல்லையில் போர்பதற்றம் போல ரசிகர்களுக்கும் பரபரப்பு இருக்கும். ஆனால், இந்த பரபரப்பை சமீபமாக மழை (SriLanka Rains) வந்து அணைத்து வைக்கிறது.
ஆசிய கிரிக்கெட் கோப்பை பட்டியலை பொறுத்தமட்டில் இந்தியா எதிர்வரும் 3 ஆட்டங்களை வெற்றிகண்டால் புள்ளிபட்டியலில் தனக்கான முதல் அல்லது இரண்டாவது இடத்தை பெற்று இறுதி தேர்வு போட்டிக்கு முன்னேறும். ஆனால், தோல்வி என்ற நிலை வந்தால், அடுத்தடுத்த நுழைவுகள் கேள்விக்குறிதான்.
நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா (Rohit Sharma) 56 ரன்னும், ஹில் (Gill) 58 ரன்னும் அடித்திருந்தனர். களத்தில் விராட் கோலி (Virat Kohli) - கே.எல் ராகுல் (KL Rahul) ஜோடி இருந்தது.
தற்போதைய நேரடி நிகழ்வு (12:50 PM) தகவலின் படி, இன்று இலங்கை மண்ணில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலபரீட்ச்சை நடத்துவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. மாலை நிலை மாறாமல் இருக்க கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.