Rohit Sharma about Victory: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு காரணம் என்ன? - மனம்திறந்த ரோஹித்; அசத்தல் பதில்.!

ஆனால், பந்துவீச்சாளர்களின் மன உறுதி காரணமாக வெற்றி நமக்கானது என ரோஹித் சர்மா தெரிவித்தார்.

CWC 2023 | IND Vs PAK (Photo Credit: Twitter)

அக்டோபர் 15, குஜராத் (Cricket News): ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 போட்டியில் (ICC Cricket World Cup 2023), 12 வது ஆட்டம் நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி (Narendra Modi Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

இந்தியா - பாகிஸ்தான் (India Vs Pakistan) அணிகள் மோதிக்கொண்ட இந்த ஆட்டத்தில், 42.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த பாகிஸ்தான் (Pakistan Cricket Team) அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி, 30.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி (Team India) வெற்றி அடைந்தது.

அதைத்தொடர்ந்து உலக கோப்பை 2023 புள்ளிப்பட்டியலில் இந்தியா 1.821 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை தக்க வைத்தது. நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு பாகிஸ்தான் அணியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பல சர்ச்சை கருத்துக்களை முன் வைத்திருந்தனர். Janhvi Kapoor: தேவதை போல மெதுவாக நடந்து வந்த ஜான்வி; வியந்து பார்த்த கூட்டம்.. அசத்தல் வீடியோ உள்ளே.! 

CWC 2023 | IND Vs PAK (Photo Credit: Twitter)

ஆனால், முதல் போட்டியிலேயே அவர்களுக்கு மாபெரும் தோல்வி கிடைத்தது. இந்நிலையில், இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், "பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு ஆட்டத்தை அமைத்துக் கொடுத்தனர். 190 ரன்கள் சேர்க்கக்கூடிய ஆடுகளமாக இது இருக்கும் என நான் நினைக்கவில்லை.

பாகிஸ்தான் அணி 280 ரன்கள் அடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், பந்துவீச்சாளர்களின் மன உறுதி காரணமாக வெற்றி நமக்கானது. நான் இந்த வெற்றியை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடவும் விரும்பவில்லை, தாழ்வாகவும் நினைக்கவில்லை.

சமநிலையோடு இருக்க விரும்புகிறேன். அமைதியாக முன்னேறிச் செல்ல வேண்டும். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு அணியும் தரமானவை தான். போட்டியின் தினத்தில் நமது செயல்பாடுகள் மட்டுமே நமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்" என்று கூறினார்.