IND A Vs AFG A: 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. இந்தியாவை வீழ்த்தி பைனல் சென்ற ஆப்கானிஸ்தான்..!
2024 ஆசியக் கோப்பை டி20 தொடரில், இந்தியா ஏ அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அக்டோபர் 26, அல் அம்ராத் (Sports News): 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் (ACC Men's T20 Emerging Teams Asia Cup 2024)அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஏ - ஆப்கானிஸ்தான் ஏ (IND A Vs AFG A, Semi Final 2) அணிகள் நேற்று (அக்டோபர் 25) மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. PAK Vs ENG 3rd Test: நிலைத்து நின்று விளையாடி சவுத் ஷகீல் சதம்.. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தடுமாற்றம்..!
இதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் செதிக்குல்லா அடல் (Sediqullah Atal) 83, அக்பரி 64 ரன்கள் அடித்தனர். இந்திய அணி தரப்பில் ராஷிக் சலாம் (Rasikh Salam) 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 186 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்திய அணியில் ரமன்தீப் சிங் (Ramandeep Singh) மட்டும் 64 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ஆட்டநாயகன் விருதை செதிக்குல்லா அடல் பெற்று சென்றார். மேலும், வருகின்ற அக்டோபர் 27-ஆம் தேதி அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆப்கானிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி: