அக்டோபர் 25, ராவல்பிண்டி (Sports News): பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து (PAK Vs ENG 3rd Test, Day 2) அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 24) ராவல்பிண்டியில் (Rawalpindi) 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. IND Vs NZ 2nd Test: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு; நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை..!
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில், கேப்டன் சான் மசூத் மற்றும் சவுத் ஷகீல் (Saud Shakeel) நிதானமாக விளையாடி ரன்களை அடித்தனர். அப்போது, சான் மசூத் 26 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தாலும், ஒருபுறம் ஷகீல் நிலையாக நின்று விளையாடி சதமடித்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக இருந்த நோமன் அலி (Noman Ali) 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியில் சஜித் கான் (Sajid Khan) அதிரடியாக விளையாடி 48 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி 96.4 ஓவர்களில் 344 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக சவுத் ஷகீல் 134 ரன்கள் அடித்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 24 ரன்கள் அடித்திருந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி 2, சஜித் கான் 1 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
சதமடித்து அசத்திய சவுத் ஷகீல்:
Saud Shakeel what a hundred in these testing conditions batting with the tail. One of his best knocks for sure 👏 pic.twitter.com/G3BdqEZGRP
— haris. (@hariszz77) October 25, 2024